புவியியல் சார் விடயங்களை தட்டையான ஒரு தாளில் வரைகின்ற ஒரு முறையாக படங்கள் காணப்டுகின்றன. இது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரவிலக்கணமாக காணப்படுகின்றது. புவியியல் தரவுகளையும், தகவல்களையும் பயன்படுத்தும் ஒரு முறை படங்கள் என அழைக்கப்படுகின்றது. எனவே படங்களை பயன்படுத்துதல், அதனை வாசித்தல் என்பன முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டும்.
பண்டைய களங்களில் படங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொசப்பத்தேமியார் தாம் வாழ்ந்த இடத்தினை அடையாளப்படுத்த களிமண் தட்டில் தங்களது இடத்தினை அடையாளப்படுத்தினார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்ட்ட படங்களில் மிக பழமையான படமாக அது காணப்படுகின்றது.
இவ்வாறு ஆரம்ப காலம் முதல் இன்று வரை படங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றது. தற்பொழுது பல்வேறு வகையான புவியியல் சார் தேவைகளுக்கு மிக துல்லியமான தகவல்களினை படமாக்கும் நோக்கத்துக்காக பல்வேறு பட்ட முறைகள் காணப்படுகின்றன. அவையாவன பூகோள நிறையறி முறைமை, புவியியல் தகவல் முறைமை, தொலையுணர்வு தொழில்நுட்பம் போன்றனவாகும்.
புவி மேற்பரப்பில் பௌதீக பண்பாட்டு அம்சங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், அகல நெடுங்கோடுகள், மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்களான நிர்வாக எல்லைகள் போன்றன யாவும் படத்தில் அமைத்து காட்டப்படும். இடவிளக்கப்படத்தினை பொறுத்தவரை அவற்றில் அளவுத்திட்டத்துக்கு ஏற்ப நிலக்காட்சியினை சுருங்க காட்டுதல், அமைவிடம் மற்றும் திசையினை அடையாளமிடல்,இடம்சார் தகவல்களை அடையாளம் செய்தல் போன்றவற்றினை கொண்டுள்ளது.
படங்களினை பொறுத்தவரை அவை இரண்டாக பாகுபடுத்தப்படும். அவையாவன கருப்படங்கள் மற்றும் இடவிளக்கப்படங்கள் போன்றனவாகும். கருப்படங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு விடயத்தினை மட்டும் கருத்தில் கொண்டு அவற்றுக்குரிய படத்தினை வரைதல் என பொருள்படும். இடவிளக்கப்படம் என்பது புவியில் உள்ள பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களை ஒரு தட்டையான தாளில் வரைவதாக பொருள்படும்.


No comments:
Post a Comment