Monday, March 29, 2021

உலகின் சூழல் பிரச்சனைகள்

 காலநிலை மாற்றம்- உலகளாவிய ரீதியில் கடந்த நூற்றாண்டுகளாக காலநிலை மாற்றம் நடைபெற்று வருகின்றது. இந்த காலநிலை மாற்றத்துக்கு பிரதான காரணியாக இருப்பது பச்சைவீட்டு வாயுக்கள் ஆகும். இந்த பச்சை வீட்டுவாயுக்களின் அதிகரித்த தன்மையினால் புவி வெப்பமடைதல் துரிதப்படுத்துகின்றது. இந்த காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக மனித நடவடிக்கைகள்,  கைத்தொழில்கள்,நகராக்க செயற்பாடுகள், விவசாயம் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளலாம். இந்த காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு சூழல் ,சமூக, பொருளாதார  ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதாவது பனிப்படலங்கள் உருகுதல், வரட்சி, சூறாவளி, புயல்கள், கடல்நீர் மட்டம் அதிகரித்தல், விவசாய  பாதிப்புக்கள், எதிர்காலங்களில் தீவுகள் நாடுகள் கடல் நீரில் மூழ்குகின்றன. 

காடழிப்பு- உலகளாவிய ரீதியில் முக்கிய பிரச்சனையாக காடழிப்பு காணப்படுகின்றது. 2030களில் 15% ஆன காடழிப்பு கைத்தொழில் செயற்பாடுகள் காரணமாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 70% ஆன தாவரங்கள், விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. இந்த காடுகளில் 10% ஆன காடுகள் இன்று ,விறகு தேவை, தளபாட உற்பத்திக்காக காடுகள் அழிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்கா, நெதர்லாந்து பெல்ஜியம், இத்தாலி இத்தாலி ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்வதற்காக காடுகளை அழிக்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலங்களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் சூழல் மற்றும் சமூக ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

நீர் நெருக்கடி ஏற்படுதல்- நீரானது மாசடைவதாலும் , காலநிலை  மாற்றம், அளவுக்கதிகமாக  நீரை  பயன்படுத்துதல், சனத்தொகை  அதிகரிப்பு,போன்ற காரணங்களால் உலகில் நீர் நெருக்கடி ஏற்படுகின்றது. இந்த நீர் நெருக்கடியினால் இன்று 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2050ம் ஆண்டுகளில் 4.8-5.7 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்வுகூறப்படுகின்றது. இந்த நீர் நெருக்கடி ஆபிரிக்கா, ஆசியா கண்டத்தில் அதிகளவு இடம்பெறுகின்றது.


சூழற்தொகுதியும் ஆபத்தான உயிரினங்களும்- இன்று உலகில் காணப்படுகின்ற  சூழல் தொகுதியில் பல்வேறு சிக்கல் தன்மைகள் காணப்படுகின்றது. இதனால் அந்த சூழல் தொகுதியில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகின்றது. இதனால் எதிர்காலங்களில் குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழமுடியாத நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக 2050களில் 10 வகையான தாவரங்களும், 10 வகையான  விலங்குகளும் இல்லாமல் போக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...