இலங்கையினை பொறுத்தவரை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகும். இலங்கையில் சனத்தொகை பற்றி அவதானிக்குமிடத்து 2021ம் ஆண்டு தரவின்படி 21.47 மில்லியன் ஆக காணப்படுகின்றது. இதுதவிர முன்னைய ஆண்டுகளின் சனத்தொகை பற்றி பார்க்குமிடத்து 1959ம் ஆண்டு 9.64 மில்லியன் சனத்தொகையும், 1973ம் ஆண்டு 13.2 மில்லியன் சனத்தொகையும், 2007ம் ஆண்டு 19.8 மில்லியன் சனத்தொகையும், 2014ம் ஆண்டு 20.78 மில்லியன் சனத்தொகையும், 2015ம் ஆண்டு 20.9 மில்லியன் ஆகவும், 2016ம் ஆண்டு 21.02 மில்லியன் ஆகவும், 2017ம் ஆண்டு 21.1 மில்லியன் ஆகவும், 2018ம் ஆண்டு 21.2 மில்லியன் ஆகவும், 2019ம் ஆண்டு 21.3 மில்லியன் ஆகவும், 2020ம் ஆண்டு 21.4 மில்லியன் ஆகவும் காணப்பட்டது.
மற்றும் இலங்கையின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்தினை அவதானிக்குமிடத்து 1965ம் ஆண்டு 2.4% ஆகவும், 1975ம் ஆண்டு 1.88% ஆகவும், 1983ம் ஆண்டு 1.44% ஆகவும், 1996ம் ஆண்டு 0.68% ஆகவும், 2003ம் ஆண்டு 0.85% ஆகவும், 2009ம் ஆண்டு 0.7% ஆகவும், 2015ம் ஆண்டு 0.57% ஆகவும், 2018ம் ஆண்டு 0.48% ஆகவும், 2019ம் ஆண்டு 0.45% ஆகவும், 2020ம் ஆண்டு 0.42% ஆகவும் காணப்பட்டது.
உலக சனத்தொகையில் இலங்கையின் பங்களிப்பு 0.27% ஆக காணப்படுகின்றது. அத்தோடு உலக சனத்தொகையில் இலங்கை 58 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. இலங்கையில் ஒரு சதுரகிலோமீட்டர்க்கு 341 பேர் வசிக்கின்றனர். அத்துடன் இலங்கையில் நகர சனத்தொகை 18.4% ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கையில் எதிர்கால சனத்தொகையினை அவதானிக்குமிடத்து 2025ம் ஆண்டு 21.41 மில்லியன் ஆகவும், 2030ம் ஆண்டு 22 மில்லியன் ஆகவும், 2035ம் ஆண்டு 22.16 மில்லியன் சனத்தொகையும், 2040ம் ஆண்டு 22.18 மில்லியன் ஆகவும், 2045ம் ஆண்டு 22 மில்லியன் ஆகவும், 2050ம் ஆண்டு 21.8 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர இலங்கையில் அதிகளவு சனத்தொகை கொண்ட நகரங்களை அவதானிக்குமிடத்து 2021ம் ஆண்டு தரவின்படி கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, மொறட்டுவை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிட்ட கொட்ட, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, கண்டி, திருகோணமலை, கல்முனை ஆகிய நகரங்கள் காணப்படுகின்றன.


No comments:
Post a Comment