விவசாய ரீதியான பாதிப்புக்கள்- மண்ணரிப்பு ஏற்படுவதனால் மண்ணானது ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக தாவரங்கள் சிறப்பாக வளர முடியாத நிலை உருவாகின்றது. குறிப்பாக ஈரான் நாட்டில் 94% பாதிப்பும், பாகிஸ்தானில் 61% பாதிப்பும், இலங்கையில் 44% பாதிப்பும் நேபாளத்தில் 26% பாதிப்பும் காணப்படுகின்றது.
மேல் மண் படை இழக்கப்படல்- மண்ணரிப்பு துரிதமாக நடைபெறுவதனால் மண்ணில் உள்ள மேல் மண் படையானது அடித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண் வளம் குன்றுகின்றது. பிரேசில் நாட்டில் ஆண்டுதோறும் 55 மில்லியன் தொன் மேல் மண் படை அழிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் 25000 மில்லியன் தொன் மேல் மண் படை பாதிக்கப்படுகின்றது.
மண்ணின் சேதன பொருட்களின் அளவு குறைவடைதல்- மண்ணரிப்பு காரணமாக மேல்மண் படை தரம் இழக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் நீரோடு அல்லது காற்றோடு அடித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணில் உள்ள சேதன ககுருக்களின் அளவு குறைந்து காலப்போக்கில் மண் வளம் குன்றும்.
நீர் தேக்கங்களில் நீரின் கனவளவு குறைவடைதல்- ஆற்றுப்படுக்கைகளில் அதிகளவிலான மண்ணரிப்பு நிகழ்கின்றது. இதன் காரணமாக மண் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நீரின் மூலம் மண் அரித்து செல்லப்படுகின்றது. இதனால் மன்னனின் அளவு குறைவதோடு நீர் தேக்கங்களின் கனவளவும் குறைவடைவதனை அவதானிக்கலாம்.
தரிசு நிலங்கள் உருவாகுதல்- மண்ணரிப்பு ஏற்படுகின்ற பகுதியில் காற்றோடு அல்லது நீரோடு மேல் மண் படை அரித்து செல்லப்படுகின்றது. இதன் காரணமாக மண்ணில் உள்ள சேதன கூறுகள் குறைவடைந்து செல்கின்றது. இதன் காரணமாக மண் வளம் குன்றியதாக மாறுகின்றது. இது காலப்போக்கில் தரிசு நிலங்களாக மாறுவதனை காண்கின்றது.


No comments:
Post a Comment