Friday, March 5, 2021

உலக வங்கி

 உலக வங்கி என்பது வளர்ந்து வரும் நாடுகளுக்கு முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் வசதிகளினை பெற்றுக்கொடுக்கின்ற  நிறுவனம்  ஆகும். உலக வங்கியின் நோக்கம் உலகின் வறுமையினை குறைப்பதாகும். உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கி குழுவின் முதன்மை நிறுவனம் ஆகும். இதில் 189 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக காணப்படுகின்றன. 

உலக வங்கியின் அமைவிடம் அமெரிக்காவின் வொஷிங்டொன் நகரில் அமைந்துள்ளது. இதன் தலைவர் ஜிங் ஜோம் ஜிம் ஆவார். உலக வங்கி 1944ம் ஆண்டு பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. உலக வங்கியின் பாரம்பரிய தலைவர் ஒரு அமெரிக்கர் ஆவார். 

உலக வங்கியின் இன்றைய தலைவராக டேவிட் மால்பஸ் காணப்படுகின்றார். உலக வங்கியினை பொறுத்தவரை உலகில் இருக்கின்ற நாடுகள் ஆபத்தில் மற்றும் பண நெருக்கடி, யுத்தம், இயற்கை அனர்த்தம், பொருளாதார சிக்கலில் இருக்கின்றபோது தங்களால் இயன்ற உதவிகளினை மேற்கொள்ளும்.

உலக வங்கியின் இரண்டு பிரதான குறிக்கோள்கள் காணப்படுகின்றது. அவையாவன 2030ம் ஆண்டுக்குள் உலக வறுமையினை 3 சதவீதமாக குறைத்தல், மற்றும் உலகில் 40 வீதமான வறிய நாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் வருமானத்தினை உயர்த்துதல் போன்றனவாகும்.



No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...