மின்னணு வர்த்தகம் தொழில் புரட்சிக்கு பின்னர் அனைத்து தொழில்சார் நடவடிக்கைகளும் மின்னணு மூலம் நிறைவேற்றப்பட தொடங்கியது. தொழில்நுட்ப புரட்சியின் விளை இரண்டு முக்கிய காரணிகளாக கணனி பொறியும் இணையமும் ஆகும். மின் வணிகம் என்பது இரண்டு நிறுவனங்களுக்கு இடையே அல்லது வணிக நிறுவனத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறும். இரண்டு வாடிக்கையார்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும். இதுதவிர கடன் அட்டை மூலம் பொருட்களை விற்க வாங்க முடியும்.
கடந்த சில வருடங்களாக இந்த மின்னணு விற்பனை முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. ஆடம்பர பொருட்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வரை இந்த மின்னணு மூலம் விற்க கூடியதாக இருக்கும். இருந்த இடத்தில் இருந்து கொண்டு நமக்கும் எங்களை சார்ந்தவர்களுக்கும் எதையுமே கொண்டு சேர்க்க கூடிய அளவுக்கு மின்னணு வர்த்தகம் முக்கியம் பெற்ற ஒன்றாக மாறி விட்டது.
வாடிக்கையாளர்களின் நேரம் போதாமை, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பணப்பரிமாற்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, போன்ற காரணங்களால் மின்வணிகத்தின் வளர்ச்சி சிறப்பாக காணப்படுகின்றது. மக்களுக்கு எந்த பொருட்கள் தேவைப்படுகின்றதோ அந்த பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
மின் வர்த்தகத்தினை பொறுத்தவரை கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்தை வாய்ப்பினை கொண்டிராத பொருட்களை கூட சந்தைக்கு கொண்டு போய் சேர்க்கும் வல்லமையினை இது கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இன்று உலகளாவிய ரீதியில் மின் வர்த்தகம் முக்கியம் பெறுகின்றது.
மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக முதலீட்டு வருமானத்தின் மதிப்பீட்டினை அடிப்படையாக கொண்ட எந்த ஒரு பொருட்கள் , சேவைகளும் வணிக வாய்ப்பினை உருவாக்குவதாக அமையும்.


No comments:
Post a Comment