Friday, February 26, 2021

கொங்கோ மழைக்காடுகள்

 உலகின் இரண்டாவது மிகப்பெரிய அயனமழைக்காடாக விளங்குவது கொங்கோ மழைக்காடாகும். இது 3.7 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட மெக்சிக்கோ நாட்டினுடைய பரப்பளவும் சமனாக காணப்படுகின்றது. இது கொங்கோ நதியினை அண்மித்தும் அதனை சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்த கொங்கோ காட்டினை சூழ்ந்து கஜானா, கமரூன், கொங்கோ குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு, ஆகிய நாடுகள் காணப்படுகின்றது.

கொங்கோ காடுகள்

கொங்கோ காடானது மலைக் கொரில்லா  குரங்குகளின் வீடாக காணப்படுகின்றது. இது தவிர காட்டு  யானைகள், 1000 வகையான பறவையினங்கள், 75 மில்லியன்  மக்கள், மற்றும் 150 வகையான காட்டு வாசி இனங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கொங்கோ மழைக்காடானது 1.6 மில்லியன் வருடங்கள் முதல் 10000 வருடங்கள் பழமை வாய்ந்த காடாக காணப்படுகின்றது. கொங்கோ அயனமழை காடுகளினை கொங்கோலியன் மழைக்காடுகள் எனவும் எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. இந்த காடுகள் 2000 ஆம் ஆண்டு முதல் 0.3% இனால் அருகிக்கொண்டு செல்வதாக கூறப்படுகின்றது. 


இந்த காட்டில் 10000 வகையான தாவரங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.  இதுதவிர 400 வகையான முலையூட்டிகள் , 700 வகையான  மீனினங்கள் போன்றன காணப்படுகின்றன. இங்கு வாழும் 75 மில்லியன் மக்கள் இந்த காட்டினை ஆதாரமாக கொண்டு தான் வாழ்கின்றார்கள். உலக காடுகளில் 18% ஆன காடுகள் கொங்கோ மழைக்காடுகளாக இருக்கிறது.

கொங்கோ காடுகள்

இந்த கொங்கோ மழைக்காடுகளின் காலநிலையினை அவதானிக்கின்றபோது இது அயன காலநிலைக்கு உட்பட்டு காணப்படுகின்றது. இங்கு குளிர் நிலவும் அதே சந்தர்ப்பத்தில் வெப்பமும் நிலவும் தன்மை கொண்டது. இங்கு 365 நாட்களில் 117 நாட்கள் மழை பொழியும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இங்கு ஆண்டு மழைவீழ்ச்சி 1866 மில்லிமீட்டர் ஆகும். வெப்பநிலையினை பொறுத்தவரை 20 தொடக்கம் 27 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு கிட்டத்தட்ட 30% மான ஒட்சிசன் வாயு தயாரிக்கப்படுகின்றமை விசேடமாக காணப்படுகின்றது.


No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...