Thursday, February 25, 2021

உலகப்படத்தினை வரைந்தவர் யார்

 நாம் இன்று வாழ்கின்ற உலகத்தினை தட்டையான தாளில் வரைந்த பெருமை தொலமி என்பவரினையே சாரும். இவர் தொலெமி, மற்றும் தாலமி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார் இவர் கி.பி 90ம் ஆண்டளவில்  பிறந்தார். இவரின் பிறப்பிடம் எகிப்து ஆகும். இவர் ஒரு சிறந்த  புவியியலாளரும்,வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழியினை நன்கு கற்று தேர்ந்தவர் ஆவார். இவரின் உலகப்படம் கி.பி 2ம் நூற்றாண்டில் கிரேக்கர்களினால் அறியப்பட்ட ஒன்றாகும். இவருடைய படங்கள் அகல கோடுகள் மற்றும் நெடுங்கோடுகள் ஆகியவற்றினை பயன்படுத்தி வரையப்பட்டு இருக்கிறது. முதன்முதலாக அகல, நெடுங்கோடுகளை பயன்படுத்தி உலகப்படத்தினை வரைந்த பெருமை தொலமியினை சாரும்.

தொலமி

இவரின் நிலப்படத்தில் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலப்படம் நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட இரண்டு கடல்களாக தான் காணப்படுகின்றது. அதில் ஒன்று நடுக்கடல் மற்றயது இந்திய பெருங்கடல் ஆகும். இந்திய பெருங்கடலினை பொறுத்தவரை கிழக்கே தென்சீன கடல் வரை பரந்து காணப்படுகின்றது.

இந்த உலக படத்தில் ஐரோப்பா, மையக்கிழக்கு, இந்தியா, இலங்கை, மாலைதீவு சீனா ஆகிய இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தினை அடிப்படையாக கொண்டு 2ம் நூற்றாண்டில் வணிக நடவடிக்கைகள் யாவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் இந்தியாவினை வணிகர்கள் அடையாளம்  செய்தனர்.

தொலமி

தொலமியின் உலகப்படத்தில் இலங்கையினை தப்ரபேன் என அழைக்கப்பட்டது. தொலமியின் நூலில் ஆசியா கண்டத்தின் தெற்கு பகுதியில் ஒரு தீவு இருப்பதாகவும் அது தப்ரபேன் எனவும் அழைக்கப்பட்டது. இருந்தபோதும் தொலமியின் காலத்தில் இலங்கை கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆரம்பத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவரின் உலகப்படத்தில் தப்ரபேன் இனை காண்பது சிக்கலாக இருந்தது. ஏனெனில் தப்ரபேனின் அளவு மிக பெரியதாக காட்டப்படுள்ளது. அதேவேளை இந்தியா அதன்  விட சிறியதாக காட்டப்பட்டது. இதனை பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி தக்கன பிரதேசத்தினை தப்ரபேனுடன் இணைத்து காட்டியதால் தான் அது பெரிதாக தெரிந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த ஐயம் ஓரளவு தெளிந்தது. 

இன்று நங்கள் வாழ்கின்ற பூமி பல கண்டங்களாக பிரிந்துள்ளது. ஆயினும் கூட பிற்பட்ட கால அறிஞர்கள் தொலமியின் படத்தினை ஆதாரமாக கொண்டு தான் அது கண்டங்களாக பிரிந்ததை எடுத்து விளக்கியுள்ளார்கள். தொலமியின் ஆரம்ப படமே இன்றைய உலக படத்திற்கு ஒரு அச்சாணி ஆகும் என்பது உண்மைக்குரிய விடயமாகும். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...