Sunday, February 21, 2021

இலங்கையின் தாமரைக்கோபுரம்

 இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரமானது கொழும்பு வியாஜரத்ன மாவத்தைக்கும் பெரா வாவிக்கும் அருகாமையில் காணப்படுகின்றது. இது பெரா வாவியில் இருந்து மேற்காக 740 மீட்டரிலும் , ரத்னம் வைத்தியசாலையில் இருந்து தென்மேற்காக 730 மீட்டரிலும் , கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வட மேற்காக 1250 மீட்டரிலும் அமைந்துள்ளது. இதன் உயரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு கொழும்பு மாவட்டம் முழுவதும் தெரியும். இதன் கட்டுமான பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். 

இந்த தாமரை கோபுரம் சீனாவின் நிதியுதவியுடன் 104 மில்லியன் அமெரிக்க டொலர்இல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது 356.3 மீட்டர் உயரத்தினை கொண்டுள்ளதோடு தெற்காசியாவில் மிக உயரமான கோபுரமாகவும் விளங்குகின்றது. உலகின் அதிசயத்தில் ஒன்றான பிரான்ஸ் இன் ஈபிள் கோபுரம் 324 மீட்டரினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாங்காய் கோபுரம், பெர்க்கி கோபுரம் , பெர்லின் கோபுரம் போன்றவற்றுக்கு அடுத்தாற்போல இலங்கையின் தாமரைக்கோபுரம்  காணப்படுகின்றது.

இலங்கையின் தாமரைக்கோபுரம்

இந்த தாமரை கோபுரம் கொழும்பு மாநகரத்துக்கு அழகு சேர்க்கும் முகமாக காணப்படுகின்றது. இந்த கோபுரத்தில் 13 மாடிகள் காணப்படுகின்றது. இதில் 6 மாடிகள் அடித்தளத்தில் காணப்படுகின்றது. இதன் உச்சிக்கு செல்ல மின்சார இயக்கிகள் உபயோகிக்கப்படுள்ளது. இங்கு 215 மீட்டர் வரை மின்னியக்கியில் செல்ல 2 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படும். 

இதன் முதலாவது மாடியில் வர்த்தக கடைத்தொகுதியும் , உணவுகடைத்தொகுதியும் காணப்படுகின்றது. 3 மற்றும் 4 வது மாடியில் விடுதியும், விருந்தினர் பகுதியும் காணப்படுகின்றது. இதுதவிர இக்கோபுரத்தில் 400 பேர் அமரக்கூடிய மண்டபம், திருமண மண்டபம், ஆடம்பர விடுதிகள், பார்வையாளர் மண்டபம் ஆகியனவே காணப்படுகின்றது.

இலங்கையின் தாமரைக்கோபுரம்

இக்கோபுரத்தின் அடித்தள பகுதியில் தொடர்பாடல் பகுதி, அருங்காட்சியகம், உணவு விடுதிகள் , பூங்காக்கள், 50 ரேடியோ நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியன காணப்படுகின்றது. இவை அனைத்தும் 219.8 மீட்டர் இல் அமைந்து காணப்படுகின்றது. அத்துடன் 1500 வாகனங்களினை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய வாகன தரிப்பிடம் காணப்படுகின்றது.

இந்த கோபுரம் இந்துசமுத்திர பரப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இடமாக காணப்படுகின்றது. இலங்கையின் இந்த தாமரைக்கோபுரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஒரு இடமாகவும், தொழில்நுட்பத்தின் விருத்தி மையமாகவும்  தற்பொழுது மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...