உலகின் மிக பெரிய எரிமலையாக மவுனாலோவா காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் கவாய் தீவில் அமைந்துள்ளது. கவாய் தீவு என்பது முற்றுமுழுதாக எரிமலை வலயத்தினை கொண்டுள்ள தீவாகும். அதில் தான் இந்த மவுனாலோவா எரிமலையும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் பரப்பு 750000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
மவுனாலோவா எரிமலையின் உயரம் 4169 மீட்டர்கள் ஆகும். இதன் பாறை அமைப்பு கிட்டத்தட்ட 700000 தொடக்கம் 1 மில்லியன் ஆண்டுகள் பமையானதாக காணப்படுகின்றது. இந்த எரிமலை 1843ம் ஆண்டு முதன் முதலாக வெடிப்பினை மேற்கொண்டது. இறுதியாக 1984ம் ஆண்டு தனது கக்குகையினை மேற்கொண்டது. இதுவரை 33 தடவைகள் கக்குகையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மவுனாலோவா எரிமலை 400000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டத்திலிருந்து தோன்றியதாக கூறப்படுகின்றது. 1843இல் தனது கக்குகையினை மேற்கொண்ட இவ் எரிமலை 77பேரினை காவுகொண்டதாக கூறப்படுகின்றது. இது ஒரு உயிர்த்த எரிமலையாக காணப்படுகின்றது. இதன் நீளம் 120 கிலோமீட்டர்கள் ஆகவும் அகலம் 103 கிலோமீட்டர்கள் ஆகவும் காணப்படுகின்றது.
மவுனாலோவா எரிமலை கவாய் தீவின் 85% பரப்பினை கொண்டு வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த எரிமலை கக்குகையின் காரணமாக 8 கிலோமீட்டர் கடல் தரை பரவல் செயற்பாடு நடைபெற்றது. மவுனாலோவா எரிமலை இறுதியாக 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி கக்குகையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த எரிமலையினை சுற்றி பனிப்படலங்கள் நிறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு கவாய் தீவில் இந்த எரிமலை தவிர 7 எரிமலைகள் சங்கிலி வடிவ அமைப்பில் காணப்படுகின்றது. இந்த பகுதியினை பொறுத்தவரை புவிநடுக்ககங்கள் மிக மிக குறைவாகவே நடைபெறும் என்பது சுட்டிக்காட்டப்படுள்ளது.
மவுனாலோவா எரிமலை கடல் குன்று அமைப்பினை போல காணப்படும். ஏனெனில் இவை சங்கிலி அமைப்பில் இருப்பதால் கடல் குன்றுகள் போல காட்சியளிக்கும். இந்த எரிமலை தொடர்பாக விஞ்ஞானிகள் இன்றுவரை தமது ஆராய்ச்சியினை மேற்கொள்கிறார்கள்.


No comments:
Post a Comment