Wednesday, February 24, 2021

உலகின் கண்டங்கள்

 புவியினை பொறுத்தவரை பெரும்பகுதி நீரினாலும் ஏனைய பகுதி நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது. நிலத்தினால் சூழப்பட்ட பகுதி கண்டங்களாக வியாபித்துள்ளது. உலகின் கண்டங்கள் 7 ஆக காணப்படுகின்றது. அவையாவன ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அவுஸ்ரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அந்தாட்டிக்கா போன்றனவாகும். இந்த 7 கண்டங்களிலும் சுமார் 270 நாடுகள் பரப்பி காணப்படுகின்றது.

ஆசியா கண்டத்தினை எடுத்துக்கொண்டால் இது உலகின் பெரியதாகவும் அதிக சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. இது பூமியின் வடக்கு மற்றும் கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது உலக நிலப்பரப்பில் 30% இனை கொண்டுள்ளது. இதன் கிழக்கில் பசுபிக் கடலும், தெற்கில் இந்திய பெருங்கடலும், எல்லைகளாக காணப்படுகின்றது. ஆசியா கண்டத்தில் சுமார் 69 நாடுகள் காணப்படுகின்றன.

உலகின் கண்டங்கள்

ஆபிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது பெரிய கண்டமாகவும் அதிக சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. உலகின் இருண்ட கண்டம் என ஆபிரிக்கா வர்ணிக்கப்படுகின்றது. இக்கண்டம் வடக்கு மத்தியதரை கடலினால் சூழப்பட்டது. உலக நிலப்பரப்பில் இது 20. 4% இனை கொண்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தில் சுமார் 44 நாடுகள் காணப்படுகின்றது.

அவுஸ்ரேலியா கண்டம் உலகின் மிக சிறிய கண்டம் என அழைக்கப்படுகின்றது. அத்துடன் குறைவான சனத்தொகை கொண்ட கண்டமாகவும் காணப்படுகின்றது. இது முற்றிலும் கடலினால் சூழப்பட்ட கண்டமாகும்.  இங்கு வாழ்கின்ற மக்களில் 82% ஆன மக்கள் கரையோர பகுதிகளில் வாழ்கின்றனர்.

உலகின் இரண்டாவது சிறிய கண்டமாக ஐரோப்பா கண்டம் காணப்படுகின்றது. உலக நிலப்பரப்பில் 6.8% ஆன பரப்பினை இக்கண்டம் கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டமானது 10180000 சதுரகிலோமீட்டர் பரப்பினை கொண்டுள்ளது. இந்து 53 நாடுகள் காணப்படுகின்றது.

வட அமெரிக்க கண்டமானது உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். இது பூமியில் 16.5% பரப்பினை கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 24230000 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். வட அமெரிக்க கண்டத்தில் 43 நாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் கண்டங்கள்

தென் அமெரிக்க கண்டத்தினை அவதானிக்கின்றபோது நான்காவது பெரிய கண்டமாக காணப்படுகின்றது. மேற்கில் பசுபிக் கடலும், தெற்கில் அந்தாட்டிக்கா பனிப்பாறைகளும், கிழக்கில் அத்திலாந்திக் கடலும் காணப்படுகின்றது. இங்கு முழுமையாக 14 நாடுகள் காணப்படுகின்றது.

அந்தாட்டிக்கா கண்டமானது தென் முனையில் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 14.5 மில்லியன் சதுரகிலோமீட்டர் ஆகும். இங்கு 68% நீர் நிலைகள் காணப்படுகின்றது. அந்தாட்டிக்கா கண்டத்தில் சுமார் நான்கு நாடுகள் காணப்படுகின்றது. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...