சூரிய குடும்பத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது சூரியன் ஆகும். இது சூரிய குடும்பத்தின் மத்தியில் காணப்படுகின்றது. இது புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சராசரியாக 93 மில்லியன் மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த சூரியனில் 92.1% ஆன ஐதரசனும் , 7.8% ஆன கீலியமும் , காபன் 0.02% உம், நைதரசன் 0.008% உம், ஓட்சிசன் 0.06% உம், நியோன் 0.01% உம், மக்னீசியம் 0.003% உம், சிலிக்கன் 0.004% உம், சல்பர் 0.002% உம், இரும்பு 0.004% உம் காணப்படுகின்றது. சூரியனுக்கு வளையங்கள் இல்லை.
சூரியனது உட்பாக வெப்பநிலை 15 மில்லியன் பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றது. இது சூரிய குடும்பத்தில் 99.8% ஆன திணிவினை கொண்டிருக்கின்றது. இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். சூரியனின் விட்டம் 1.39 கிலோமீட்டர்கள் ஆக காணப்படுகின்றது. இதன் வயது கிட்டதட்ட 4.6 பில்லியன் வருடங்கள் ஆகும். சூரியனில் 7 வகையான படை அமைப்புகள் காணப்படுகின்றன. அவையாவன Corona layer, Transition region, Chromosphere layer, photosphere layer, Core, Convection zone, Radiative zone போன்றனவாகும்.
photosphere layer பற்றி அவதானிக்கின்றபோது இது மிகவும் ஆழமான ஒரு படையாக காணப்படுகின்றது. இந்த படையை நாம் வெற்றுக்கண்களால் நேரடியாக அவதானிக்கலாம். புவி மேற்பரப்பில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த படை காணப்படுகின்றது. இது பல முடிச்சுக்களினால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் வெப்பநிலை 3700-6200 பாகை செல்ஸியஸ் ஆகும்.
Chromosphere layer பற்றி அவதானிக்கின்றபோது இது 250-1300 மைல் இடையில் காணப்படுகின்றது. இதன் வெப்பநிலை சராசரியாக 3700-7700 பாகை செல்ஸியஸ் ஆகும். ஆகவே இது வெப்பம் கூடிய ஒரு படையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Transition region இனை அவதானிக்கும்போது இது மிகவும் மெல்லிய படையாக காணப்படுகின்றது. இது Chromosphere layer மற்றும் corona layer ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் வெப்பநிலை சராசரியாக 7700- 500000 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படுகின்றது.
Corona layer பற்றி அவதானிக்கின்றபோது இது 1300 மைல் இல் இருந்து ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து இது photosphere layer வரை பரந்துள்ளது. இந்த படையின் வெப்பநிலை சராசரியாக 500000 பாகை செல்ஸியஸ் ஆகும். இதனை வெற்றுக்கண்களால் பார்க்க முடியாது.
சூரியனில் காணப்படுகின்ற இந்த படைகள் உட்படைகள், வெளிப்படைகள் என பாகுபடுத்தப்படுகின்றது. உட்படைகளில் Core, Convection zone, Radiative zone போன்றனவும் வெளிப்படைகளில் Corona layer, Transition region, Chromosphere layer, photosphere layer போன்றனவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment