Monday, February 15, 2021

யுரேனஸ் கோள் பற்றிய தகவல்கள்

 சூரிய குடும்பத்தில் இறுதி பகுதியில் இருக்கின்ற முக்கிய கோளாக யுரேனஸ் கோள் காணப்படுகின்றது. இது சூரியனில் இருந்து 1753635,815 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகின்றது. இந்தக்கோள் பக்கப்பார்வை கொண்ட கோளாகவும் சரிவினை கொண்ட கோளாகவும் விளங்குகின்றது.

இதனை 1781ம் ஆண்டு வில்லியம் ஹார்ச்சல் கண்டு பிடித்தார். இது  நுண்துளைகாட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கோளாக காணப்படுகின்றது. இது பூமியினை விட பெரியதாக காணப்படுகின்றது. இதற்கு 27 நிலவுகள் உள்ளது. இது தோன்றிய காலத்தில் இருந்து நான்கு தரம் பூமியை விட அகலமாக மாறியது.

யுரேனஸ் கோள்


இது சூரியனில் இருந்து ஏழாவது கோளாக காணப்படுகின்றது. ஒரு சுற்றுவட்ட பாதையினை சுற்றி முடிக்க 84 வருடங்கள் எடுக்கும். இதனை யுரேனர் ஆண்டு என அழைத்துக்கொள்ளுவார்கள். இது ஒரு நாளினை சுற்ற 17 மணித்தியாலங்கள் எடுக்கும். இதனது விட்டம் 25362 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த யுரேனஸ் கோளில் பனி,  நீர்,மெதேன் வாயு,  அமோனியா, சிறிய கற்பாறைகள் போன்றன காணப்படுகின்றது.

யுரேனஸ் கோளுக்கு 13 வளையங்கள் உண்டு. இதனுடைய வளையங்கள் உள்வளையம், வெளிவளையம் என பாகுபடுத்தப்படுகின்றது. உள்வளையங்கள் யாவும் கருமையான நிறத்திலும், மெல்லியதாகவும் காணப்படும். வெளிவளையங்கள் அனைத்தும் பிரகாசமான நிறத்தில் இருக்கும்.

யுரேனஸ் கோள்

யுரேனஸ் கோளினுடைய செல்லப்பெயர் ''The bulls eye planet'' ஆகும். இது தவிர இந்த கோளுக்கு நான்கு படைகள் காணப்படுகின்றது. அவையாவன Outer Atmosphere, Atmosphere, Mantle, Core போன்றனவாகும். Outer Atmosphere இல் மேல் படை முகில்கள் காணப்படுகின்றன. Atmosphere இல்  நீராவி, கீலியம், மெதேன் போன்றனவும், Mantle இல் நீர், அமோனியா, மெதேன், பனி போன்றனவும், Core இல் சிலிக்கேற்று, இரும்பு, நிக்கல், பாறைகள் போன்றனவும் காணப்படுகின்றன. 

யுரேனஸ் கோளில்  நாங்கள் உயிர்வாழ முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனெனில் இங்கு நீர் காற்று வாழ்வதற்கான சூழல் போன்றன எதுவும் இல்லை என்பதாகும்.   இது வெள்ளிக்கோளை போல கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும். இது மற்றைய கோள்களை போல நிலைக்குத்தாக சுழறாமல் கிடையாகவே சுழலும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...