1969ம் ஆண்டில் நிலவுக்கு போய் உணவு உண்டவர் நீல் ஆம்ஸ்ரோங் ஆவார். மனித குலத்தின் முன்னேற்றத்தின் பெரும் பாய்ச்சலாக விண்ணில் காலடி வாய்த்த ஆம்ஸ்ரோங்கின் மரணம் மனித குலத்திற்கே பேரிழப்பாகும். அவ் வகையில் நிலவில் முதன் முதலாக 1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் திகதி கால் பதித்த அமெரிக்காவின் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங் தனது 82ஆவது வயதில் காலமானார். இவரது இழப்பிற்கு முன்னால் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட உலகின் முன்னணி தலைவர்கள் பலரும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துள்ளனர்.
1969ம் ஆண்டில் ரஷ்ய விஞ்ஞானிகள் நிலவுக்கு விண்கலத்தை செலுத்தவிருந்த வேளையில் திடீரென அமெரிக்கா தான் விண்கலத்தை செலுத்தியதாகவும் அதில் நீல் ஆம்ஸ்ரோங் சென்றதாகவும் தெரிவித்தது. இதனை அடுத்து ரஷ்யா தான் செலுத்தவிருந்த விண்கலத்தை நிறுத்தி கொண்டது. நீல் ஆம்ஸ்ரோங் உண்மையாகவே நிலவில் தரையிறங்கினாரா என்ற சந்தேகங்கள் இன்னமும் பரவலாக இருக்கிறது. காரணம் அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம் தான். நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் அமெரிக்க கொடியை நாட்டுவது போல அமைந்துள்ள அப்புகைப்படத்தில் மூன்று கொடியின் நிழல்கள் காணப்படுகின்றது. நிலவில் ஒரு பொருளை நட்டால் அதன் நிழல் ஒன்றாக தான் தெரியும். காரணம் சூரிய ஒளி. 3 சூரியன் இருந்தால் தான் 3 நிழல் தோன்றும். எனவே இதனை வைத்து பலர் நீல் ஆம்ஸ்ரோங் நிலவுக்கு செல்லவில்லை என்று வாதிடுகின்றனர். ஆனால் அவர் அமெரிக்க விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றதாகவும் பின்னர் அங்கிருந்து திரும்பியதாகவும் சொல்லப்படுகிறதே தவிர அவர் நிலவில் காலடி பாதிக்கவில்லை என்று பலராலும் வாதிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோநெட்டோ என்ற சிறிய நகரில் பிறந்த ஆம்ஸ்ரோங் புருடியு பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய 30ம் வயதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் அடிப்படியாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்தநிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவு குறித்த பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பலோ விண்கலம் தயார் செய்யப்பட்டது. அப்பலோ ஒன்று மற்றும் இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில் அப்பலோ 2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் பறந்தார்.
அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகையில் 1/6 பங்கு மட்டுமே கொண்டிருந்த காலகட்டத்தில் நிலவில் காலடி பதித்தார். நிலவில் இறங்கி நடக்க தொடங்கியதை அடுத்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் இணைந்து கொண்டு நடந்து சென்று நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
பின்னர் பூமிக்கு திரும்பி ஆம்ஸ்ரோங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பப்பிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார். அதன்பின் சின்சினாடி பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். பின்பு இவர் சில மாதங்களாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் காலடியை வைத்ததாகவே கருதப்படுகின்றது. அக்காலடி அவர் மறைந்தாலும் மனித குல வரலாறு உள்ள வரை நிலைத்திருக்கும்.


No comments:
Post a Comment