Tuesday, March 30, 2021

வரட்சியினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 விவசாயம் பாதிப்படையும்- வரட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றுதல் மற்றும் தாவரப்போர்வைகள் அருகுதல்  போன்றவை நடைபெறுகின்றன.  குறிப்பாக ஈரானில் 94% ஆன விவசாயம் சார்ந்த பாதிப்பும், பாகிஸ்தானில் 61% ஆன பாதிப்பும், இந்தியாவில் 25% ஆன பாதிப்பும், ஆப்கானிஸ்தானில் 33% ஆன பாதிப்பும் ஏற்படுகின்றது. இதுதவிர மொறாக்கோவில் 70% ஆன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசி, பட்டினி ஏற்படுதல்- வரட்சியின் நிமிர்த்தம் விவசாயம், வாழ்வாதாரம் ஆகியன  பாதிக்கப்படுகின்றன. இதனால்  பஞ்சம், பசி, பட்டினி முதலானவை ஏற்படுகின்றது. எத்தியோப்பியாவில் 600 மில்லியன் மக்களில் 8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.4 மில்லியன் குழந்தைகளும் அடங்குகின்றனர். எதித்ரியாவில் 1.3 மில்லியன் மக்கள் உணவுப்பற்றாக்குறையினால் அக்கறைப்படுகின்றனர். சோமாலியாவில் 1 மில்லியன் மக்கள் உணவுப்பிரச்சனையினை எதிர்நோக்குகின்றனர். ஆப்கானிஸ்தானில் 2.5 மில்லியன் மக்களும், இந்தியாவில் 130 மில்லியன் மக்களும், உகாண்டாவில் 550000 மக்களும் வரட்சியினால் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர்.

காட்டுத்தீ ஏற்படுதல்- வரட்சியினால் வெப்பம் சில பகுதிகளில் உயர்வாக இருக்கும். இதனால் காற்று வீசும்போது மரங்கள் ஒன்றோடுஒன்று உராயும்போது காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2010ம் ஆண்டு  பொலிவியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2012ம் ஆண்டு மெக்சிக்கோவில் ஏற்பட்ட  காட்டுத்தீ, 2015ம் ஆண்டு கொலராடோவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ போன்றவற்றினை குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

இடப்பெயர்வு ஏற்படுதல்-  பஞ்சம், பசி, பட்டினி காரணமாக மக்களிடையே பிணக்குகள் ஏற்படுகின்றது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களினையும், சேவைகளினையும் பெற்றுகொள்ள இடப்பெயர்வுகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் 250000 மக்களும், தார் பாலைவனப்பகுதியில் 100000 மக்களும் இடப்பெயர்வினை மேற்கொண்டுள்ளனர்.

நீர் பற்றாக்குறை ஏற்படுதல்- வரட்சி காரணமாக நீர்நிலைகளில் நீர் வற்றுதல், இடம்பெறுகின்றது. இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. அத்துடன் மக்கள் அசுத்தமான நீரினை பருகவேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சீனாவில் வட சான்ஷி மாகாணத்தில் 3 மில்லியன் மக்களும், பாகிஸ்தானில் 3 மில்லியன் மக்களும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திராவில் 130 மில்லியன் மக்களும் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...