Wednesday, March 31, 2021

புவிநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்

 உயிரிழப்புக்கள் ஏற்படுதல்- புவிநடுக்கம் ஒரு இடத்தில் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதன் தாக்கத்துக்கு ஏற்ப உயிரிழப்புகளும் ஏற்படும். குறிப்பாக 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 280000 பேர் உயிரிழந்தார்கள். 2010ம் ஆண்டு கெயிட்டியில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 16000 பேர் உயிரிழந்தனர். 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 18184 பேர் இறந்தார்கள். 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4510 பேர் உயிரிழந்தனர். 2018ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 2256 பேர் உயிரிழந்தனர்.

சொத்துக்கள் அழிவடைதல்- புவிநடுக்கத்தினால் மனித உயிரினங்கள் அழிவடைவது மட்டுமில்லாமல் சொத்துக்களும் அழிகின்றன. குறிப்பாக கட்டிடங்கள், வீடுகள் ஆகியன இடியுண்டு அழிகின்றன. 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 1 பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 360 பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது. 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் 1000 வீடுகள் அழிக்கப்பட்டது.

தாவர போர்வைகள் அழிவடைதல்- நிலநடுக்கம் ஏற்படுவதனால் அதிகளவான மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்ற நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிகளவான தாவர போர்வைகள் அழிவடைகின்றன. தாவர போர்வைகள் அழிவடைவதனால் காலப்போக்கில் புவிவெப்பமடைதல் தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது.

நிலச்சரிவுகள் ஏற்படுதல்- புவிநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து  விழுதல், மரங்கள் சரிதல் ஆகியவற்றினால் பாறைப்படைத்தளங்கள் விரிசல் நிலையினை அடைகின்றது. குறிப்பாக 2015ம் ஆண்டு நேபாள புவிநடுக்கத்தினால் கிராமிய பகுதியில் மட்சரிவு ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் மட்சரிவு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி அலைகள் உருவாதல்- குறிப்பாக புவிநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் இலும்  அதிகமானால் சுனாமி அலைகள் தோற்றுவிக்கப்படும். இதனால் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்படும். 1960ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் சுனாமி அலைகள் உருவாகியது. இதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டது. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் 9.1 ரிக்டர்  அளவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் சுனாமி ஏற்பட்டது. 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவு புவிநடுக்கத்தினால் சுனாமி அலைகள் தோற்றுவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...