புவிநடுக்கமானது மிக ஆழத்தில் உருவாகும் தன்மை கொண்டது. தகடுகளின் ஒன்றுக்கு ஒன்றான நகர்வுகள் காரணமாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. புவியோட்டின் கீழ் அகவிசை தொழிற்பாட்டினால் தோன்றும் அலைகள் புவியோட்டின் ஒரு பகுதியை நடுக்கத்துக்கு உள்ளாக்குகின்றது. இதனை புவிநடுக்கம் என அழைப்பார்கள். இதில் குவிவு மையம், மேன்மையம் என 2 பகுதிகள் உண்டு. குவிவுமையம் 70 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்து காணப்படும். உலகில் ஒவ்வொரு 2 1/2 மணித்தியாலத்துக்கும் 1 புவிநடுக்கம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 40 நடுத்தர புவிநடுக்கமும், 40-50 வரையான சிறிய புவிநடுக்கமும் ஏற்படுகின்றது. இந்த புவிநடுக்கத்தினை அளக்கும் அளவுத்திட்டம் ரிக்டர் ஆகும்.இதனை மேற்காலி என்பவர் கண்டறிந்தார்.
புவிநடுக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகள் பற்றி அவதானிக்குமிடத்து தகடுகளின் அசைவு காணப்படுகின்றது. புவியில் பல்வேறு வகையான சிறிய மற்றும் பெரிய கவச தகடுகள் காணப்படுகின்றது. இவை மோதுகின்றபோது அதிர்வுக்கு உள்ளாகி புவிநடுக்கம் ஏற்படுகின்றது. குறிப்பாக 1993ம் ஆண்டு இந்தியாவில் மாராஷ்ராவில் ஏற்பட்ட புவிநடுக்கமானது இந்திய தகடு மற்றும் யுரேசியன் தகடுகள் நகர்ந்ததால் ஏற்பட்டதாகும். 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட புவிநடுக்கமானது பர்மா தகடு மற்றும் இந்தியத்தகடு நகர்ந்தமையால் ஆகும்.
எரிமலை செயற்பாடுகள்- தகடுகளின் விலகல் செயற்பாடுகள் காரணமாக புவியின் உட்புறத்திலுள்ள பாறைக்குழம்பு அகவிசை தொழிற்பாட்டினால் உந்தப்பட்டு வெளித்தள்ளப்படுகின்றது. இதனால் எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றது. இந்த அதிர்வின் காரணமாக புவிநடுக்கமானது குறித்த பகுதியில் ஏற்பட வழிவகுக்கின்றது. 1975ம் ஆண்டு கவாயில் உள்ள கிலேயுலா எரிமலை கக்குகையினால் 6.9 ரிக்டர் அளவுக்கு புவிநடுக்கம் உருவாகியது. 1981ம் ஆண்டு சென் கெனஸ் எரிமலை கக்குகையினால் 5.5 ரிக்டர் அளவில் புவிநடுக்கம் ஏற்பட்டது.
புவிநடுக்கம் ஏற்படுகின்ற பகுதிகளில் குடியிருப்புக்களினை அமைத்தல்- இன்று அதிகரித்து வரும் சனத்தொகைக்கு ஏற்ப மக்கள் எல்லா இடங்களிலும் குடியிருப்புக்களினை அமைத்து கொள்கிறார்கள். இந்த குடியிருப்புக்களை புவிநடுக்க வலய பகுதிகளில் அமைக்கும் பொருட்டு காலப்போக்கில் கட்டடங்களின் அதிர்வினால் புவிநடுக்கம் தோற்றம் பெறுகின்றது.
அகழ்வு நடவடிக்கைகளினை மேற்கொள்ளுதல்- அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் வேறு தேவைகள் காரணமாக மக்கள் நிலத்தினை குடைந்து அதில் அகழ்வு கைத்தொழில்களினை மேற்கொள்கின்றனர். இந்த அகழ்வு காரணமாக பாறைப்படைத்தளங்கள் அதிர்வு நிலைக்கு உள்ளாகி புவிநடுக்கத்தினை தோற்றுவிக்கின்றது. குறிப்பாக இலங்கையில் இரத்தினக்கல் அகழ்வு, இந்தியா மற்றும் சீனாவில் நிலக்கரி அகழ்வு , தென்னாபிரிக்காவில் தங்க அகழ்வு போன்றவற்றினை கூறிக்கொள்ளலாம்.
கடலுக்கடியில் மேற்கொள்ளப்படுகின்ற அணுஆயுத பரிசோதனைகள்- இன்றைய வளர்ந்து வரும் உலகில் அணுஆயுதங்கள்,ஏவுகணைகள் போன்றன கடலினை அடிப்படையாக கொண்டு ஏற்படுகின்றன. அத்துடன் அணுஆயுதங்களினையும் அணுகுண்டுகளினையும் கடலுக்கடியில் வெடிக்க செய்கின்றனர். இந்த அதிர்வின் காரணமாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. குற்பியாக ரஷ்யா, ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா , பாகிஸ்தான்,வட கொரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் அணுஆயுத உற்பத்தியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment