Saturday, March 20, 2021

கெப்பனின் மத்தியதரை காலநிலை

 கெப்பனின் காலநிலை பகுப்பில் சூடான இடைவெப்ப மழை காலநிலை c காலநிலை என அடையாளம் செய்யப்பட்டுள்ளது. இந்த c காலநிலையில் cs காலநிலை வறண்ட கோடையையும் மாரி மழையையும் கொண்ட உப காலநிலை பிரிவாக  காணப்படுகின்றது.cs காலநிலை மேலும் csa  மாரிமழை கடும்வெப்ப கோடை எனவும் cse மாரி மழை குளிர்ச்சியான கோடை என நுண் பிரிவுகளினை  கொண்டுள்ளது.

cs காலநிலை மத்தியதரை கடற்பகுதியை சூழ்ந்து காணப்படுவதால் அதனை மத்தியதரை காலநிலை என அழைப்பார்கள்.  இவை பொதுவாக கண்ட நில மேற்கு கரைப்பகுதிகளில் மத்திய தரைக்கடலுக்கு வெளியில் அமைந்துள்ளமையினை காணலாம். அகல கோட்டு அடிப்படையில் இதன் இடஅமைவு 30-45 பாகைக்கு இடையில் பெரும்பாலும் அமைந்துள்ளது. கண்ட அடிப்படையில் இடஅமைவை நோக்கும்போது தென் ஐரோப்பாவின் தெற்கு எல்லைப்பகுதியும் ஆபிரிக்காவின் நிலப்பகுதியும் உள்ளடங்கி இருக்கும். 

கெப்பனின் மத்தியதரை காலநிலை

இந்த காலநிலையில் போத்துக்கல், தென் பிரான்ஸ், தென் ஸ்பெயின், இத்தாலி, குரைஷியா, பொன்சியா, யூக்கோசொலவாக்கியா, அல்பேனியா, கிரீஸ், மாசிடோனியா, பல்கேரியா ஆகிய ஐரோப்பிய  நாடுகளும், ஆபிரிக்காவில் மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா மற்றும் ஒடுங்கிய கடற்கரை போன்றனவும் ஆசியாவில் மத்தியதரை, துருக்கி, சிரியா, இஸ்ரேல், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றனவும், காணப்படுகின்றது. மத்தியதரை கடலுக்கு வெளியே உள்ள பிரதேசங்களை அவதானிக்கும்போது வட அமெரிக்காவில் கலிபோர்னியா, வட மெக்சிக்கோ போன்றனவும், தென் அமெரிக்காவில் மத்திய சில்லியும், தென் ஆபிரிக்காவில் தென் பகுதியும், அவுஸ்ரேலியாவின் தென்மேற்கு கடற்கரையோரமும் அடிலெய்ட் பகுதியும் காணப்படுகின்றது.

கெப்பனின் மத்தியதரை காலநிலை

இங்குள்ள வெப்பநிலை தன்மைகளை அவதானிக்கும்போது வரட்சியான கோடை பருவ வெப்பநிலை காணப்படுகின்றது. இங்கு சராசரியாக 20-35 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை காணப்படுகின்றது. csa வெப்பமான கோடையாகவும் , cse இளஞ்சூடான கோடையாகவும் காணப்படுகின்றது. கோடையில் சூரியக்கதிர் வீசலின் அளவு அதிகரித்து காணப்படும். இதற்கு வெப்பநிலை பிரதான காரணமாக இருக்கிறது. மாரிகாலத்தில் சராசரி வெப்பநிலை 3-18 பாகை செல்ஸியஸ் ஆக காணப்படும்.

இயற்கை தாவரங்கள் பற்றி அவதானிக்கும்போது ஈரமான குளிர்ச்சியான உயர் நிலங்களில் அடர்த்தி குறைந்த காடுகள் காணப்படுகின்றது. சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் புற்தரைகள் அதிகம் காணப்படுகின்றது. இவற்றுக்கு இடையே சில இடங்களில் உயரம் குறைந்த திறந்த காடுகள் காணப்படுகின்றன. இங்கு கோடை வறண்ட பருவம் என்பதால் தடித்த பட்டை கொண்ட நீண்ட வேர்களை கொண்ட தாவர இனங்கள் காணப்படுகின்றது. தாவரங்களின் இலைகள் மெழுகு போல தடித்த தன்மையினை கொண்டு காணப்படுகின்றது. கோடையில் ஆவியாகத்தை தடுக்க கூடிய இலைகள் இங்கு காணப்படுகின்றது. 

இங்குள்ள மண் வகையினை அவதானிக்கும்போது கடல்சார் மண் செழிமை அற்றதாகவும் மணல் வயல்களை அதிகம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. சமவெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் வண்டல் மண் அதிகமாக காணப்படுகின்றது. புல்வெளியை அண்டிய பகுதிகளில் கருமணல் காணப்படுகின்றது. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...