Saturday, March 27, 2021

காட்டுத்தீயினால் ஏற்படும் விளைவுகள்

 காடுகள் மற்றும் தாவரங்கள் அழிக்கப்படல்- காட்டுத்தீ ஏற்படுவதனால் காடுகள் எரிவடைகின்றன. இதன் காரணமாக  காட்டுவாழ் உயிரினங்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 2017ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 200000 ஹெக்டேயர்ஸ் புல்நிலங்கள் அழிவுற்றன. 2018களில் நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 153000 ஏக்கர் காடுகள் அழிவடைந்தன. 

உயிரிழப்புகள்  ஏற்படுதல்- காட்டுத்தீ ஏற்படுவதன் காரணமாக அதில் சிக்குண்டு பல உயிர்கள் அழிவடைகின்றன. குறிப்பாக 1991ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 25 பேர் இறந்தார்கள். 2017ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 11 பேர் உயிரிழந்தார்கள், 2018ம் ஆண்டு கிரீஸ், லற்ருவியா , சுவீடன் ஆகிய இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 92 பேர் உயிரிழந்தார்கள். 2018ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 98 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
wildfire

வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிவடைதல்-  பிரதேசத்தில் காட்டுத்தீ ஏற்படும்போது அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகள், பொதுக்கட்டிடங்கள் மற்றும் வேறு கட்டிடங்கள் போன்றவற்றில் காட்டுத்தீ பரவும் சந்தர்ப்பம் ஏற்படும். இதனால் அவை அழிவடைகின்ற ஒரு நிலை உருவாகும். குறிப்பாக 2017ம் ஆண்டு வட கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 8900 பொதுக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டன. 2017ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1000 பொதுக்கட்டிடங்கள் அழிவுற்றன. 2018ம் ஆண்டு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 1604 பொதுக்கட்டிடங்கள் அழிவுற்றன.

சூழல் வெப்பநிலை  அதிகரிக்கும்- ஒரு பிரதேசத்தில் காட்டுத்தீ ஏற்படும் சந்தர்ப்பத்தில் அந்த பகுதி எங்கும் வெப்பநிலை அதிகரித்த நிலையில் இருக்கும். இந்த அதிகரித்த வெப்பநிலை காரணமாக புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சனை ஏற்படுகின்றது.
wildfire

நோய்கள் உருவாகும்- காட்டுத்தீயினால் ஏற்படும் சாம்பல்கள் மற்றும் தூசு துணிக்கைகள் காற்றின் மூலம் பரவி மனிதனின் உடலில் புகும்போது சுவாச நோய்கள், சரும நோய்கள் போன்றன ஏற்படுகின்றன. குறிப்பாக நெருப்பின் மூலம் காபனீரொட்சைட், மொனக்ஸ்சைட், நைதரசன் ஓட்சைட், போன்றவற்றினால் சுவாச ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. 2007ம் ஆண்டு சாண்டியாகோ பிரதேசத்தில் ஏற்பட்ட காடதி காரணமாக ஆஸ்துமா நோய் அதிகளவில் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...