Tuesday, March 23, 2021

புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகள் பற்றி அறிந்துகொள்வோம்

 மனிதன் தனது தேவைகள் , விருப்பங்கள் போன்றனவற்றினை பெறும்பொருட்டு வரலாற்று காலம் தொட்டு கைத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றான். கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் மனிதன் சிறுசிறு  கைத்தொழில்களை மேற்கொண்டுவந்தான். இதற்கு பின்பு 1760-1820ம் ஆண்டுகளுக்கு இடையில் இயந்திரமயமாக்கப்பட்ட கைத்தொழில் புரட்சி இங்கிலாந்தில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உலகில் உள்ள எல்லா நாடுகளும் சிறுகைத்தொழில் , நடுதாரகைத்தொழில் மற்றும் பாரிய கைத்தொழில்களை மேற்கொள்ள தொடங்கின. இதனை அடிப்படையாக கொண்டு புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளினை பற்றி அவதானிப்போம்.

உலகில் இன்றைய புதிய கைத்தொழிலாக்க நாடுகளானது 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் இருந்து காணப்படுகின்றது. குறிப்பாக புதிய கைத்தொழில் மயமாக்க நாடுகளின் பட்டியலில் ஆசியாவின் 4 கைத்தொழில் புலிகளாக 1970-1980 களிடையே கொங்ஹொங், சிங்கப்பூர், தாய்வான், தென்கொரியா ஆகியன அங்கத்துவம் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 1994ம் ஆண்டு  மெக்சிக்கோ, இணைந்தது. 2000ம் ஆண்டுகளில்  மலேசியா,  பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து ஆகிய நாடுகள் அங்கம்  வகித்தன. 2025ம் ஆண்டு வியட்நாம் இணைந்துகொள்ள இருக்கின்றது.

new industrial countries

உலகளாவிய புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளினை அவதானிக்கும்போது 2021ம் ஆண்டு தரவுகளின்படி சீனா,  இந்தியா,தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ்,  துருக்கி, தென் ஆபிரிக்கா, பிரேசில், மெக்சிக்கோ, ஈரான், வெனிசுவெலா, இஸ்ரேல் ஆகியன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

புதிய கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளின் பண்புகளை அவதானிக்கும்போது இங்கு பொருளாதார விருத்தி உயர்வாக இருக்கும்,  நகர சனத்தொகை அதிகரித்து காணப்படும், மனிதனின் வாழ்வியல் கோலங்கள் விருத்தி பெற்றிருக்கும், சிறந்த தொடர்பாடல் வசதிகளையும் உயர் தொழில்நுட்ப திறனையும் பெற்றிருக்கும், இந்த நாடுகளில் சிறப்பான கல்வி வசதிகள் காணப்படும், போக்குவரத்து வலைப்பின்னல் சிறப்பாக காணப்படும்.

new industrial countries

இந்த புதிய கைத்தொழில் மயமாக்க நாடுகளின் கைத்தொழில் விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளினை அவதானிக்குமிடத்து அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கைத்தொழில் கொள்கை காணப்படல், தாராளமயமான பொருளாதார கொள்கை, மக்களின் இன மத ரீதியான ஒற்றுமை, தனியார் கைத்தொழில் முதலீடுகளுக்காக அரசு குறைந்த வட்டி வீதத்தில் அதிக கடன்களை வழங்குதல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வி விருத்தி, புதிய இயந்திர சாதனங்களின் வருகை, ஏற்றுமதி ஊக்குவிப்பு அதிகரித்தல், மக்களினை கவரும் வகையில் புதிய பொருட்களினை வடிவமைத்தல், சிறந்த தொழிலாளர்கள், நவீனத்துவதுடன் கூடிய நகராக்க விருத்திகள், சிறந்த போக்குவரத்து விருத்தி மற்றும் சந்தை வாய்ப்பு போன்றனவற்றினை குறிப்பிட்டு கொள்ளலாம். 

இந்த புதிய  கைத்தொழில் மயமாக்க நாடுகள்  பொதுவாக விவசாயம் சார்ந்த  உற்பத்திகள்,   ஆடை உற்பத்தி, மருந்து உற்பத்தி, இலத்திரனியல் சார் உற்பத்திகள், அகழ்வு தொடர்பானவை, தொழில்நுட்பம் போறவற்றினை அடிப்படையாக கொண்டு உற்பத்தியினை மேற்கொள்கின்றன. இதனால் இந்த நாடுகளின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் முன்னோக்கி செல்கின்றது எனலாம். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...