Monday, March 15, 2021

ஆற்றின் சுமை கொண்டுசெல்லப்படும் முறைகள்

 ஆற்றினுடைய சுமை கொண்டுசெல்லப்படும் முறைகளை பிரதானமாக 4 பெரும் பிரிவாக பாகுபாடு செய்து கொள்ளலாம். அவையாவன ஏற்றுதல்/ தெத்துதல், காவுதல், கரைசல், உருட்டுதல் போன்றனவாகும். ஏற்றுதல்/ தெற்றுதல் என்பது மிக பிரதானமோர் அம்சமாக  காணப்படுகின்றது.ஆற்றினால் அரித்து கொண்டுவரப்படும் பருப்பொருட்களில் மிக மிக பாரம் குன்றிய நுண்ணிய பருப்பொருட்களை தன்வசம் மேற்பரப்பினூடாக நகர்த்துகின்றபோது அதனை ஏற்றுதல், செயன்முறை என்று அழைப்பார்கள். இதன்போது மிக நுண்ணிய மணற்கற்கள்,  பாறைகள், தூசிகள் போன்றவற்றினை எடுத்துச்செல்வதனை அவதானிக்கலாம். 

River processing

முதலாவது நிலையின்போது கொண்டு செல்லப்பட்ட பருப்பொருட்களின் அளவினை விட ஓரளவு திணிவு கூடிய பருப்பொருட்களின்  அளவினை விட ஓரளவு பாரம் கூடிய பருப்பொருட்கள் காவுதல் செயன்முறையின்போது நிகழும். இதன்போது  சிறுபரல்கள் நகரும்.

பாறைப்படைத்தளங்களில் காணப்படுகின்ற கல்சியம் போன்ற கனிமங்களை ஆறானது கரைத்து வருகின்றபோது அதனை கரைசல் என அழைப்பார்கள். அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களோடு மேலும் ஏற்றுதல், மற்றும் காவுதல் போன்றவற்றின்முலம் கொண்டுவரப்பட்ட பருப்பொருட்களின் திணிவினை விட பாரம் கூடிய, குறிப்பாக மணற்கல், உள்ளிட்ட பதார்த்தங்களை கொண்டுசெல்லும் தன்மை கொண்டது.

River processing

மேற்கூறப்பட்ட செயன்முறைகளின் மூலம் எடுத்து செல்லமுடியாத பாரம் கூடிய பருப்பொருட்களை நதியானது அடிப்பரப்பினூடாக எடுத்துச்செல்கின்றபோது அதனையே உருட்டுதல் என அழைத்து கொள்ளுவார்கள்.  

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...