Tuesday, March 16, 2021

உலக சனத்தொகை பரம்பலில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

 காலநிலை தன்மைகள்- ஒரு பிரதேசத்தில் மக்கள் வாழ வேண்டுமெனில் சிறப்பான காலநிலை என்பது அவசியமாகின்றது. குறிப்பாக அதிக  குளிர், அதிக வெப்பநிலை உள்ள பிரதேசத்தில் மக்கள் வசிக்க முடியாது. உலகினை பொறுத்தவரை அயன வலயம், இடைவெப்ப வலய பகுதிகளில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப சாதகமான காலநிலை தன்மைகள் கிடைக்க பெறுகின்றது. இதனால் இந்த வலயங்களில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். 

சிறப்பான தரைத்தோற்றம்- மக்கள் வாழ்வதற்கும் தமது குடியிருப்புக்களினை அமைத்து கொள்வதற்கும் தரைத்தோற்றம் நன்கு திறம்பட அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பகுதிகள், சாய்வான தளங்கள் போன்றன மனிதன் வாழ்வதற்கு பொருத்தமான இடமாக  இல்லை.மாறாக சமதரை கொண்ட நிலப்பகுதிகளில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் பீஜிங், இந்தியாவின் டெல்கி, அமெரிக்காவின் வொஷிங்டன் போறவற்றினை கூறிக்கொள்ளலாம்.

உலக சனத்தொகை

இயற்கை அனர்த்தங்கள் அற்ற பகுதிகள்- மக்கள் வாழ்வதற்கு சிறப்பான சூழல் அவசியமாகின்றது. குறிப்பாக இயற்கை அனர்த்தங்களான புவிநடுக்கம், எரிமலை கக்குகை, சுனாமி போன்றன நிகழும் பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்கள் அமைக்கப்பட மாட்டாது. மாறாக இயற்கை அனர்த்தங்களின் அளவு குறைந்த பகுதிகளில் அதிகவிலான மக்கள் வாழ்கின்ற சூழ்நிலை உருவாகும்.

நகராக்கம் நிறைந்த இடங்கள்- இன்றைய உலகினை பொறுத்தவரை நகர்ப்பகுதிகள் அனைத்து தேவைகளையும், சேவைகளையும் வழங்குகின்ற ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக 2018ம் ஆண்டு தரவின்படி 53.5% மக்கள் நகர பகுதிகளில் வாழ்கின்றனர். இது 2050களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2020ம் ஆண்டு தரவுகளின் படி உலகின் தலைசிறந்த நகராக்கம் இடம்பெறும் பகுதிகளாக வத்திக்கான், ஜிப்ரால்டர், நவ்ரூ, பெர்முடா, கொங்ஹொங், மொனாகோ, அங்குவாலா, லக்ஸம்பேர்க், சிங்கப்பூர், கட்டார் ஆகியன காணப்படுகின்றன.

உலக சனத்தொகை

சிறந்த பொருளாதார விருத்தி- ஒரு நாட்டில் மனிதன் தன்னிறைவாக வாழ்வதற்கு பொருளாதாரம் முக்கியமானதாகும். எப்பகுதியில் சிறப்பான பொருளாதாரம் காணப்படுகின்றதோ அந்த பகுதியில்  அதிகளவிலான மக்கள் குடியேறுவார்கள். குறிப்பாக உலகின் சிறந்த பொருளாதாரத்தினை கொண்ட நாடுகளினை நாம் அவதானிக்கும்போது அமெரிக்கா,  சீனா, ஜப்பான், ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம், பிரான்ஸ், இந்தியா, இத்தாலி, பிரேசில், கனடா ஆகியன காணப்படுகின்றன.

சிறப்பான கல்வி நடவடிக்கைகள்- ஒரு நாட்டின் அதிகளவு சனத்தொகை பரம்பல் இருக்க வேண்டுமாயின் அந்த நாட்டில் சிறப்பான கல்வி நடவடிக்கைகள் செவ்வனே அமைந்திருக்க வேண்டும். அதாவது வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கல்விற்காக வாழ்கின்ற நிலை காணப்படுகின்றது. இன்று உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக ஒஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் போறவற்றினை கூறிக்கொள்ளலாம். 

சிறந்த சுகாதார வசதிகள்- உலக மக்கள் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு சிறந்த சுகாதாரம் முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்டுகின்றது. ஒரு குழந்தை பிறப்பு முதல் அனைத்து விடயத்துக்கும்   சுகாதாரம்,மருத்துவம் முக்கியமாகின்றது. இந்த சுகாதாரவசதி சிறப்பாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் அதிகளவிலான மக்கள் ஒருங்குவார்கள். 2020ம் ஆண்டு தரவுகளின்படி சிறந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தினை கொண்டுள்ள நாடுகளாக ஸ்பெயின், இத்தாலி,  ஐஸ்லாந்து,  ஜப்பான் , சுவிஸ்லாந்து, சுவீடன், அவுஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகியன காணப்படுகின்றன. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...