Friday, March 26, 2021

மத்தியதரை விவசாயம்

 உலகின்  பாகுபாடுகளில் முக்கியம் பெற்ற வகையாக மத்தியதரை விவசாயம் காணப்படுகின்றது. இந்த விவசாயம் மத்தியதரை கடலினை சுற்றியுள்ள பகுதிகளிலும் உலகின் மத்தியதரை காலநிலை காணப்படுகின்ற பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான இந்த மத்தியதரை விவசாயம் மேற்கொள்ளப்படுகின்ற பகுதிகளாக ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், குரோஷியா, பொன்சியா, அல்பனியா, துருக்கி, அல்ஜீரியா,  லிபியா, பிரான்ஸ், மொறாக்கோ, துனிசியா, இஸ்ரேல் ஆகிய இடங்களும் மத்தியதரை கடலுக்கு அப்பால் கலிபோர்னியா,  சில்லி, தென்னாபிரிக்கா, மறேடார்லிங் நதியினை  அண்டிய தென் அவுஸ்ரேலியா பகுதி போன்றவற்றில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த விவசாயமானது ஈரலிப்பான மாரியில் பயிரிட்டு 6 மாதங்கள் உள்ளடங்கலாக கோடையில் அறுவடை செய்யப்படுகின்றது. அத்துடன் மத்தியதரை காலநிலைக்கு ஏற்றவாறு குறைந்த வெப்பநிலையில் வளரக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளிலும் மேய்ச்சல் நிலங்களிலும் பயிர்ச்செய்கை பண்ணப்படுகின்றது. 

மத்தியதரை காலநிலை

மத்தியதரை விவசாயத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவதற்கு தேவையான மழைவீழ்ச்சியினை அவதானிக்கும்போது 25-75 சென்ரிமீட்டர்  தேவை. இவ்வாறான அளவீட்டில் பயிர்கள் வளரும் . இந்த மத்தியதரை விவசாயத்தில் மரக்கறி  வகைகள்,  ,பழங்கள், புற்கள், தானியவகை முதலானவை பயிரிடப்படுகின்றன. குறிப்பாக மரக்கறிகளாக பீற்றூட், வெங்காயம், கரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றனவும், பழங்களை பார்க்குமிடத்து ஆப்பிள், பியர்ஸ், செரி, திராட்சை, தோடை, எலுமிச்சை போன்றனவும், தனியவகைக்குள்  கோதுமை, அவரை, பட்டானிக்கடலை, பார்லி போன்றன பயிரிடப்படுகின்றது. இதுதவிர ஒலிவ், அத்தி, பேரிந்து, அல்பெல்பா புற்கள், சிற்றிஸ் போன்றனவும் பயிரிடப்படுகின்றது.

மத்தியதரை காலநிலை

இந்த மத்தியதரை விவசாயமானது 4 வகையான பிரிவுகளில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றது. அவையாவன மழையினை நம்பிய பயிர்ச்செய்கை, மானாவாரி பயிர்ச்செய்கை, விலங்கு தீனி மற்றும் மரக்கறி வகைகள், மந்தை மேய்த்தல் மற்றும் விலங்கு வளர்ப்பு போன்றனவாகும்.

மத்தியதரை விவசாயமானது ஆரம்பகாலங்களில் தன்னிறைவு பொருளாதாரத்துக்கு ஏற்ற போல பயிரிடப்பட்டது. ஆனால் இன்று இவை ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. குறிப்பாக கலிபோர்னியாவில் தோடை, எலுமிச்சை, திராட்சை ஆகியன வர்த்தக நோக்கத்துக்காக பயிரிட்டு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதுதவிர பழங்களினை பதப்படுத்தி  ஜாம் ஆகவும், பழங்கள் ஆகவும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனை காணக்கூடியதாக உள்ளது. இதுதவிர இவ் மத்தியதரை விவசாயத்தில் பயிர் மேற்கொள்கின்ற பகுதியினை அதிக மழைக்காலத்தில் பாதுகாக்கும் நுட்பமானது மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஸ்பெயின், கலிபோர்னியா ஆகிய நாடுகளில் அவதானிக்கலாம். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...