Friday, April 16, 2021

முத்துராஜவல ஈரநிலம்

இலங்கையில் உள்ள ஈரநிலங்களில் முக்கியம் பெற்ற ஈரநிலமாக முத்துராஜவல ஈரநிலம் காணப்படுகின்றது. இது அதிகளவிலான உயிர்பல்வகைமையினை கொண்டுள்ளது. இந்த முத்துராஜவல ஈரநிலமானது ''Field Of Royal Treasure'' என அழைக்கப்படுகின்றது. இந்த ஈரநிலம் கொழும்பில் இருந்து வடக்காக 10-30 கிலோமீட்டர்கள் தொலைவில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 3068 ஹெக்டேயர்ஸ் பரப்பளவினை கொண்டுள்ளது. மற்றும் நீர்கொழும்பு கடனீரேரியுடன் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக 3164 ஹெக்டேயர்ஸ் பரப்பினை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

srilanka wetlands

முத்துராஜவல ஈரநிலப்பகுதியில் பறவைகளினை உள்ளடக்கிய சரணாலயங்கள் காணப்படுகின்றன. இந்த சரணாலயம் 1777 ஹெக்டேயர்ஸ் பரப்பளவினை கொண்டுள்ளது. முத்துராஜவல ஈரநிலமானது கி.பி 5000 ஆண்டுகளுக்கு முன்னரில் இருந்து காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். இது களனி கங்கையின் வாய்பகுதியுடன் இணைந்து காணப்படுகின்றது. இங்குள்ள தாவர இனங்களில் 7 வகையான பிரதான தாவரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக Marsh, Lactic flora, Shrubland, Reed, Swamp, Grassland, Stream bank, Mangrove forest  ஆகியன காணப்படுகின்றன.

இந்த ஈரநிலப்பகுதியில் 40 வகையிலான மீனினங்களும், 14 வகையான ஊர்வனவும், 102 வகையான பறவை இனங்களும், 22 வகையான முலையூட்டிகளும், 48 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 22 வகையான ஆபத்தான பூச்சிவகைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள முக்கியமான பறவை இனங்களாக Large egrets, purple heron , Indian pond heron, Little black bittern, Yellow bittern, C bestnut, Bittern, Lesser whistle teal ஆகியன காணப்படுகின்றன.

srilanka wetlands

அத்துடன் இந்த முத்துராஜவல ஈரநிலப்பகுதி சிறந்த சுற்றுலா பகுதியாகவும், அதிகளவு சுற்றுலாப்பயணிகளை கொண்டும் காணப்படுகின்றன. மற்றும் இது புதிய விருத்திகளை பெற்றும் காணப்படுகின்றது. இது ஒரு சூழல் சார் பிரதேசமாகவும் விளங்குகின்றது. இதன் மூலம் சூழலியல்சார் சுற்றுலா விருத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...