Tuesday, September 26, 2023

புவியியல் தகவல் முறைமை

புவியியல் தகவல் முறைமை என்பது புவியியல் தரவு தொகுதி எனவும் கூறிக்கொள்ளலாம். ஆரம்ப காலகட்டத்தில் இடம் சார்ந்த தரவுகள் கணணி சார்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டது. 1980களின் பின்னர் புவியியல் தகவல் முறைமை புதுப்பொலிவுடன் முதன்மை வாய்ந்த நுட்பமாக பயன்படுத்ததொடங்கியது. இந்த புவியியல் தகவல் முறைமையினை புவியியளாளர்கள், ஆய்வாளர்கள் , பயன்பாட்டாளர்கள், மானவர்கள் தமது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

புவியியல் தகவல் முறைமையில் தகவல் பெறப்படும் முறைகள் பற்றி அவதானிக்குமிடத்து அச்சிடப்பட்ட காகித படங்கள், விமான புகைப்படங்கள், செய்மதி படங்கள், கள ஆய்வுகள், அறிக்கைகள் போன்றன கானப்ப்டுகின்றன. புவியியல் தகவல் முறைமையில் காணப்படும் கூறுக்ள் பற்றி அவதானிக்குமிடத்து வன்பொருள், மென்பொருள், மக்கள், முறை, தரவு போன்றன காணப்படுகின்றன.

புவியியல் தகவல் முறைமையின் பிரதான செய்ற்பாடுகளாக தரவு உட்செலுத்துதல், வரைபடம் தயாரித்தல், தரவுகளை கையாளுதல், கோப்பு முகாமைத்துவம், கேள்வி முகாமைத்துவம், பெறுபேற்றினை கையாளுதல் போன்றன காணப்படுகின்றன. 

புவியியல் தகவல் முறைமையின் பிரயோகங்களை அவதானிக்குமிடத்து படவரைகலையியல், புவியியல் சார்ந்த ஆய்வுகள், வள முகாமைத்துவம், இயற்கை அனர்த்த முகாமைத்துவம், புள்ளி விபர முகாமைத்துவம், நிலப்பரப்பு புலனாய்வு, இராணுவ திட்டமிடல், நகர திட்டமிடல், குற்றவியல், புவியியல் தகவல் முறைமை தரவு விருத்தி, சந்தைப்படுத்துதல், பொது சுகாதார திட்டமிடல், தொலைபேசி வலையமைப்புகள் போன்றன காணப்படுகின்றன. 

Friday, September 22, 2023

ஆசியா கண்டம்

உலகின் மிகப்பெரிய கண்டமாக இருப்பது ஆசியா கண்டம் ஆகும். அத்துடன் அதிக மக்கள் தொகையினை கொண்ட கண்டமாக ஆசியா கானப்படுகின்றது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின் படி ஆசியாவில் 4.76 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. இது உலக சனத்தொகையில் 56.22% இனை குறிக்கின்றது. ஆசியா கண்டத்தின் பரப்பளவினை அவதானிக்குமிடத்து 31033131 சதுர கிலோமீட்டர் ஆக கானப்படுகின்றது. புவி மேற்பரப்பில் 8.7% ஆன பரப்பு ஆசியா கண்டத்தில் தான் காண்ப்படுகின்றது. ஆசியா கண்டத்தின் எல்லைகளை அவதானிக்குமிடத்து கிழக்கு திசையில் பசுபிக் கடலும் , தெற்கு திசையில் இந்து சமுத்திரமும் , வடக்கில் ஆர்ட்டிக் சமுத்திரமும் , இதன் எல்லைகளாக கானப்படுகின்றன. மேலும் ஆசியா சுயெஸ் கால்வாய்க்கும் , யூரல் மலைகளுக்கும் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. இதற்கு தெற்கு திசையில் காக்கேசிய மலையும்,கஸ்பியன் கடலும், கருங்கடல் போன்றனவும் கானப்படுகின்றன.
ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா , தென்கிழக்கு ஆசியா, தென் ஆசியா என 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆசியா கண்டத்தில் 59 நாடுகள் கானப்படுகின்றன. இவ் ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய நாடாக ரஸ்சியா உள்ளது. இரண்டாவது பெரிய நாடாக சீனா கானப்படுகின்றது. உலகின் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலாவது நாடாக சீனாவும், இரண்டாவது பெரிய நாடாக இந்தியா போன்றன குறிப்பிடத்தக்கது. ஆசியா கண்டத்தில் சனத்தொகை கூடிய நகரமாக சங்காய் ஆகும்.ஆசியா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு போர்னியோ ஆகும். ஆசியா கண்டத்தில் உள்ள மிக நீளமான ஆறு யாங்சி ஆகும். ஆசியா கண்டத்தில் மிக உயரமான மலை எவறஸ்ட் ஆகும். ஆசியா கண்டத்தில் மிக சிறிய நாடு மாலைதீவு ஆகும்.

Wednesday, September 20, 2023

நியூசிலாந்தின் Slope Point

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் Slope point என்ற பகுதி காணப்படுகின்றது. இது Waikava என்ற சிறிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செம்மறியாட்டு வளர்ப்பு அதிகளவில் இடம்பெறுகின்றது. இங்கு வீதிகள் மற்றும் மக்களின் நடமாட்டம் மிகமிக குறைவாக காணப்படுகின்றது.
இங்கு வளர்கின்ற மரங்கள் பற்றி அவதானிக்கையில் இம்மரங்கள் ஒரு பக்கமாக தான் வளருகின்றன. அதாவது காற்று வீசும் திசைக்கேற்ப வளர்வதனை அவதானிக்கலாம். அந்தாட்டிக்கா பகுதியில் இருந்து வீசுகின்ற காற்றின் பிரகாரம் தான் இவ்வாறு ஒரு பக்கமாக வளர்வதனை அவதானிக்கலாம். இம்மரங்கள் விசித்திரமாக வளரும் மரங்களாக காணப்படுகின்றன. இவற்றி பார்ப்பதற்கு அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருவது வழமையாகும்.

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...