உலகின் மிகப்பெரிய கண்டமாக இருப்பது ஆசியா கண்டம் ஆகும். அத்துடன் அதிக மக்கள் தொகையினை கொண்ட கண்டமாக ஆசியா கானப்படுகின்றது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின் படி ஆசியாவில் 4.76 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. இது உலக சனத்தொகையில் 56.22% இனை குறிக்கின்றது. ஆசியா கண்டத்தின் பரப்பளவினை அவதானிக்குமிடத்து 31033131 சதுர கிலோமீட்டர் ஆக கானப்படுகின்றது. புவி மேற்பரப்பில் 8.7% ஆன பரப்பு ஆசியா கண்டத்தில் தான் காண்ப்படுகின்றது.
ஆசியா கண்டத்தின் எல்லைகளை அவதானிக்குமிடத்து கிழக்கு திசையில் பசுபிக் கடலும் , தெற்கு திசையில் இந்து சமுத்திரமும் , வடக்கில் ஆர்ட்டிக் சமுத்திரமும் , இதன் எல்லைகளாக கானப்படுகின்றன. மேலும் ஆசியா சுயெஸ் கால்வாய்க்கும் , யூரல் மலைகளுக்கும் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. இதற்கு தெற்கு திசையில் காக்கேசிய மலையும்,கஸ்பியன் கடலும், கருங்கடல் போன்றனவும் கானப்படுகின்றன.
ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா , தென்கிழக்கு ஆசியா, தென் ஆசியா என 6 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆசியா கண்டத்தில் 59 நாடுகள் கானப்படுகின்றன. இவ் ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய நாடாக ரஸ்சியா உள்ளது. இரண்டாவது பெரிய நாடாக சீனா கானப்படுகின்றது. உலகின் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலாவது நாடாக சீனாவும், இரண்டாவது பெரிய நாடாக இந்தியா போன்றன குறிப்பிடத்தக்கது. ஆசியா கண்டத்தில் சனத்தொகை கூடிய நகரமாக சங்காய் ஆகும்.ஆசியா கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு போர்னியோ ஆகும். ஆசியா கண்டத்தில் உள்ள மிக நீளமான ஆறு யாங்சி ஆகும். ஆசியா கண்டத்தில் மிக உயரமான மலை எவறஸ்ட் ஆகும். ஆசியா கண்டத்தில் மிக சிறிய நாடு மாலைதீவு ஆகும்.

No comments:
Post a Comment