Tuesday, September 26, 2023

புவியியல் தகவல் முறைமை

புவியியல் தகவல் முறைமை என்பது புவியியல் தரவு தொகுதி எனவும் கூறிக்கொள்ளலாம். ஆரம்ப காலகட்டத்தில் இடம் சார்ந்த தரவுகள் கணணி சார்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டது. 1980களின் பின்னர் புவியியல் தகவல் முறைமை புதுப்பொலிவுடன் முதன்மை வாய்ந்த நுட்பமாக பயன்படுத்ததொடங்கியது. இந்த புவியியல் தகவல் முறைமையினை புவியியளாளர்கள், ஆய்வாளர்கள் , பயன்பாட்டாளர்கள், மானவர்கள் தமது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

புவியியல் தகவல் முறைமையில் தகவல் பெறப்படும் முறைகள் பற்றி அவதானிக்குமிடத்து அச்சிடப்பட்ட காகித படங்கள், விமான புகைப்படங்கள், செய்மதி படங்கள், கள ஆய்வுகள், அறிக்கைகள் போன்றன கானப்ப்டுகின்றன. புவியியல் தகவல் முறைமையில் காணப்படும் கூறுக்ள் பற்றி அவதானிக்குமிடத்து வன்பொருள், மென்பொருள், மக்கள், முறை, தரவு போன்றன காணப்படுகின்றன.

புவியியல் தகவல் முறைமையின் பிரதான செய்ற்பாடுகளாக தரவு உட்செலுத்துதல், வரைபடம் தயாரித்தல், தரவுகளை கையாளுதல், கோப்பு முகாமைத்துவம், கேள்வி முகாமைத்துவம், பெறுபேற்றினை கையாளுதல் போன்றன காணப்படுகின்றன. 

புவியியல் தகவல் முறைமையின் பிரயோகங்களை அவதானிக்குமிடத்து படவரைகலையியல், புவியியல் சார்ந்த ஆய்வுகள், வள முகாமைத்துவம், இயற்கை அனர்த்த முகாமைத்துவம், புள்ளி விபர முகாமைத்துவம், நிலப்பரப்பு புலனாய்வு, இராணுவ திட்டமிடல், நகர திட்டமிடல், குற்றவியல், புவியியல் தகவல் முறைமை தரவு விருத்தி, சந்தைப்படுத்துதல், பொது சுகாதார திட்டமிடல், தொலைபேசி வலையமைப்புகள் போன்றன காணப்படுகின்றன. 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...