Friday, October 13, 2023

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

 தகவல்தொழில்நுட்பமானது காலத்துக்கு காலம் மாற்றம் பெற்று வருகின்ற ஒன்றாகும். மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த தகவல் தொழில் நுட்பம் காணப்படுகின்றது. ஒலி, தீ, சைகை போன்றன மனிதனின் ஆரம்ப கட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து மனிதன் கல்வெட்டு, ஓலைசுவடி, ஏடுகள் மூலமாகவும் இயல் இசை மூலமாகவும் தகவல்களை வெளிப்படுத்தினான். 

இதற்கு பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் என்று வளர்ச்சி பெற்றது. ஆனால் இன்று தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பத்தின் செல்வாக்கின் விளைவாக உலகம் இன்று ஒரு குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்ப கால கட்டங்களில் நாட்டு நடப்புக்களை தெரிந்து கொள்வதற்கு செய்திகளையும் பத்திரிகைகளை எதிர்பார்த்து நின்றொம். ஆனால் இன்று அந்த நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் நொடிகளில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.  இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ஆகும்.

மேலும் இந்த தகவல் தொழில் நுட்பமானது வீண்விரயங்களை தவிர்க்க உதவுகின்றது. அத்துடன் நேரத்தினை மீதப்படுத்துகின்றது. தகவல் தொழில்னுட்பத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வாழ்க்கை முறை உயருகின்றது. இன்று உலகமே தகவல் தொழில் நுட்பத்தில் தான் தங்கி உள்ளது. 

தகவல் தொழில் நுட்பமானது இன்று எல்லா துறைகளிலும் முக்கியம் பெற்றதாக காணப்படுகின்றது. குறிப்பாக மாணவர்களின் கல்வி தொடக்கம் எல்லோருடைய வாழ்விலும் முக்கியம் பெற்றதாக காணப்படுகின்றது. எனவே தற்கால உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பத்தின் வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாகும். 

Thursday, October 12, 2023

வட்ச் அப் இல் சனல் அறிமுகம்

 வட்ச் அப் தளத்தில் சனல்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சக பயனர்கள் மற்றும் தாங்கள் பின் தொடர்ந்து வரும் வட்ஸ் அப் கணக்கு தரப்பில் பகிரப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வட்ஸ் அப் மெச்ன்யர் இனை 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

Text message, Photo, Video என பல விடயங்களினை ஂமேற்கொள்ள முடியும். இந்த தளம் பாடசாலை முதல் அலுவலகம் வரை இப்போது குழூக்களாக ஒருவருக்கொருவர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.தங்களது பயனர்களை தனித்துவப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது புதிய அப்டெட்களை வழங்குவது வழக்கம் ஆகும். அந்தவகையில் சனல்ஸ் இனை அறிமுகம் செய்துள்ளது. 

இன்ஸ்ரகிராமில் உள்ள ப்ரொட்காஸ்ட் சனல் போல இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனி நபர்கள் போட்டொ மற்றும் வீடியோக்கள், வாக்கெடுப்புக்கள், ஸ்டிக்கெர்ஸ் போன்றவற்றினை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் பின்தொடருவோருக்கு பாதுகாப்பு இருக்கும். அதே போல ஒரு வட்ஸ் அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சகபின்தொடர்பவர்களின் விபரங்களை அறிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 11, 2023

உலகின் எட்டாவது கண்டம் பற்றிய தகவல்கள்

 உலகில் ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா . ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா, அந்தாட்டிக்கா போன்ற கண்டங்கள் காணப்படுகின்றன. இன்று 8வது கண்டம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு சீலந்தியா(Zealandia) என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதிய கண்டம் 375 ஆண்டுகள் கடலுக்குள் மறைந்திருந்ததாகவும் இப்போது வெளிப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த கண்டம் நியூசிலாந்துக்கு அருகில் உள்ளது.

இந்த கண்டம் 49லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. இதன் 94 வீதமான பகுதி பசுபிக் கடலின் தெற்கு பகுதியில் சுமார் 3500 அடி ஆளத்தில் உள்ளது. இருப்பதாக தெரிவிக்கபட்டுகின்றது. இந்த புதிய கண்டம் நியூசிலாந்தினை விட 23 மடங்கு பெரியதாகும். அத்துடன் மடகஸ்கார் தீவினை விட 6 மடங்கு பெரியதாகும்.

தற்போது உலகில் 7 கண்டங்கள் காணப்படுகின்ற நிலையில் இக்கண்டம் 8வது கண்டமாக இணைகின்றது. அத்துடன் கடல் தளத்தில் உள்ள பாறை மாதிரிகளை ஆதாரமாக கொண்டு இக்கண்டம் கண்டுபிடிக்கப்படுள்ளது. சீலந்தியா(Zealandia) கண்டம் பற்றி இன்னும் பல விடயங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதாக புவியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...