வட்ச் அப் தளத்தில் சனல்ஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சக பயனர்கள் மற்றும் தாங்கள் பின் தொடர்ந்து வரும் வட்ஸ் அப் கணக்கு தரப்பில் பகிரப்படும் தரவுகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வட்ஸ் அப் மெச்ன்யர் இனை 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
Text message, Photo, Video என பல விடயங்களினை ஂமேற்கொள்ள முடியும். இந்த தளம் பாடசாலை முதல் அலுவலகம் வரை இப்போது குழூக்களாக ஒருவருக்கொருவர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.தங்களது பயனர்களை தனித்துவப்படுத்தும் விதத்தில் அவ்வப்போது புதிய அப்டெட்களை வழங்குவது வழக்கம் ஆகும். அந்தவகையில் சனல்ஸ் இனை அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்ரகிராமில் உள்ள ப்ரொட்காஸ்ட் சனல் போல இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனி நபர்கள் போட்டொ மற்றும் வீடியோக்கள், வாக்கெடுப்புக்கள், ஸ்டிக்கெர்ஸ் போன்றவற்றினை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் பின்தொடருவோருக்கு பாதுகாப்பு இருக்கும். அதே போல ஒரு வட்ஸ் அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சகபின்தொடர்பவர்களின் விபரங்களை அறிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
No comments:
Post a Comment