தகவல்தொழில்நுட்பமானது காலத்துக்கு காலம் மாற்றம் பெற்று வருகின்ற ஒன்றாகும். மனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த தகவல் தொழில் நுட்பம் காணப்படுகின்றது. ஒலி, தீ, சைகை போன்றன மனிதனின் ஆரம்ப கட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து மனிதன் கல்வெட்டு, ஓலைசுவடி, ஏடுகள் மூலமாகவும் இயல் இசை மூலமாகவும் தகவல்களை வெளிப்படுத்தினான்.
இதற்கு பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் என்று வளர்ச்சி பெற்றது. ஆனால் இன்று தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பத்தின் செல்வாக்கின் விளைவாக உலகம் இன்று ஒரு குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்ப கால கட்டங்களில் நாட்டு நடப்புக்களை தெரிந்து கொள்வதற்கு செய்திகளையும் பத்திரிகைகளை எதிர்பார்த்து நின்றொம். ஆனால் இன்று அந்த நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் நொடிகளில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி ஆகும்.
மேலும் இந்த தகவல் தொழில் நுட்பமானது வீண்விரயங்களை தவிர்க்க உதவுகின்றது. அத்துடன் நேரத்தினை மீதப்படுத்துகின்றது. தகவல் தொழில்னுட்பத்தினால் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் வாழ்க்கை முறை உயருகின்றது. இன்று உலகமே தகவல் தொழில் நுட்பத்தில் தான் தங்கி உள்ளது.
தகவல் தொழில் நுட்பமானது இன்று எல்லா துறைகளிலும் முக்கியம் பெற்றதாக காணப்படுகின்றது. குறிப்பாக மாணவர்களின் கல்வி தொடக்கம் எல்லோருடைய வாழ்விலும் முக்கியம் பெற்றதாக காணப்படுகின்றது. எனவே தற்கால உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்னுட்பத்தின் வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாகும்.
.jpg)
No comments:
Post a Comment