Thursday, November 2, 2023

புவியில் இரவு பகல் நிகழ்வு

 புவிச்சுழற்சி காரணமாக இரவு பகல் ஏற்படுகின்றது . பிரதேசங்களுக்கு இடையில் நேர வேறுபாடுகள் ஏற்படுகின்றது புவிச்சுழற்சியின் போது சூரிய ஒளியை பெறும் புவியின் ஒரு பகுதி பகல் நேரத்தை கொண்டிருக்கும். சூரிய ஒளியை பெறாத மறுபக்கம் இரவு நேரமாக இருக்கும். நெடுங்கோடுகளின் அமைவுக்கு ஏற்ப உலகின் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய நேரம் ஒன்றுக்கொன்று வேறுபடும். உலகில் நேரம் எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை அவதானிப்போம்.

சூரியன் உச்சம் தரும் நெடுங்கோட்டில்  பகல் 12.00 ஆகும்போது அதற்கு எதிர்மாறான திசையிலுள்ள நெடுங்கோட்டில் நள்ளிரவு 12.00 மணியாகும். புவி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதனால் உலகின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் முதலில் சூரியன் உதிக்கிறது. மேற்கு நெடுங்கோடுகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு சூரியன் பின்னரே உதயமாகும்.

புவி தனது அச்சினை சுற்றி ஒருமுறை சுழல்வதற்கு 24 மணித்தியாலம் எடுப்பதுடன் 360 பாகை நகர்வையும் கொண்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு மணித்தியாலத்தில் இதன் நகர்வு 15 பாகை நெடுங்கோடு ஆகும். 1 பாகை இனை கடந்து செல்வதற்கு 4 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. எனவே 2 அகல கோடுகளுக்கு இடையில் நேரமானது 4 நிமிடங்களினால் வேறுபடும். இதன்படி 15 பாகை நெடுங்கோட்டுக்கான நேர வேறுபாடுகள் 1 மணித்தியாலங்கள் ஆகும். 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...