புவியில் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனை கோடுகள் அகலக்கோடுகள் எனப்படும். 0 பாகை அகலக்கோடு மத்திய கோடு ஆகும். மத்திய கோட்டுக்கு வடக்காக அமைந்துள்ள கோடுகள் வட அகலக்கோடுகள் ஆகும். மத்திய கோட்டுக்கு தெற்காக அமைந்துள்ள கோடுகள் தென் அகலக்கோடுகள் ஆகும். 0 தொடக்கம் 90 பாகை வரை உள்ள அகல கோடுகள் வடக்கு மற்றும் தெற்கு முனைவுகளை நோக்கி சிறுத்து செல்லும். வட முனைவும் தென் முனைவும் புள்ளியாக இருக்கும். புவியின் பிரதான அகல கோடுகளாக கடக கோடு, மகர கோடு போன்றன காணப்படுகின்றன.
புவிக் கோளத்தில் வட முனைவிலிருந்து தென் முனைவு வரை விரிவடந்து காணப்படும் கற்பனைக் கோடுகள் நெடுங்கோடுகள் என்று சொல்லப்படுகின்றது. 0 பாகை நெடுங்கோடு கிரீன்விச் கோடு என்பார்கள்.கிரீன்விச் நெடுங்கோட்டுக்கு கிழக்காக 180 பாகை வரை உள்ள கோடுகள் கிழக்கு நெடுங்கோடுகள் என்று சொல்லப்படுகின்றது. கிரீன்விச் கோட்டுக்கு மேற்காக 180 பாகை வரை உள்ள கோடுகள் மேற்கு நெடுங்கோடுகள் என்று சொல்லப்படுகின்றது. 0 பாகை நெடுங்கோடு இங்கிலாந்தின் கிரீன்விச் நகரத்தை ஊடறுத்து செல்வதினால் கிரீன்விச் கோடு என்று சொல்லப்படுகின்றது

No comments:
Post a Comment