Saturday, November 4, 2023

பூமி கோள வடிவானது என்பதற்கு சான்றுகள்

 பூமியின் ஓர் இடத்திலிருந்து கிழக்கு புறமாக புறப்பட்டால் அதே இடத்தை மேற்கு பக்கமாக வந்து சேர முடியும். பூமி தட்டை வடிவானது என்றால் அவ்வாறு வந்தடைய முடியாது. 1519ம் ஆண்டு மகலன் என்ற கடலோடி முதன் முதலில் உலகத்தை கப்பல் மூலம் சுற்றி வந்து உலகம் உருண்டையானது என்று நிரூபித்தார்.

கடற்கரையிருந்து பார்க்கும்போது வெகு தொலைவில் வரும் கப்பலின் பாய்மர உச்சியே முதலில் தெரியும். கப்பல் கரையை நெருங்க நெருங்க அதன் ஏனைய பகுதிகள் தெரிகின்றன.  இதற்கு காரணம் பூமி உருண்டை வடிவமாக இருப்பது தான்.

அடிவானம் வட்டமாக தெரிவதற்கும் சந்திர கிரகண காலத்தில் சந்திரனில் விழும் பூமியின் நிழல் வட்டமாக இருப்பதற்கும் பூமி உருண்டையாக இருப்பதே காரணமாகும்.

சூரிய குடும்பத்தில் காணப்படும் கோள்கள் யாவும் உருண்டையானவை. பூமியும் அவற்றில் ஒரு கோளாக இருக்கிறது. ஆகையால் பூமியும் உருண்டை வடிவானதாகும்.

கொழும்பிலிருந்து கிழக்கு புறமாக விமானத்தில் சென்று அமெரிக்காவினை அடையலாம். அதேபோல மேற்கு புறமாக சென்றும் அமெரிக்காவை அடையலாம்.  இதன்முலம் பூமி கோள வடிவானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூமி தட்டையாக இருந்தால் சூரிய உதயத்தை பூமியிலுள்ள எல்லா மக்களும் ஒரே நேரத்தில் காணமுடியும். ஆனால் அவ்வாறு காண்பது சாத்தியமில்லை. இதுவும் பூமி கோள  வடிவானது என்று நிரூபிக்கின்றது.

 

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...