Thursday, March 25, 2021

பாலைபரவலினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள்

 விவசாயம் பாதிக்கப்படுகின்றது- குறிப்பாக உலகில் பாலைபரவுதல் செயற்பாடுகள் காரணமாக இன்று விவசாய நிலங்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அத்துடன் விவசாயத்தினை மேற்கொள்வதற்கு போதுமான நீரும் கிடைக்கப்பெற மாட்டாது. வரட்சியானது அந்த பிராந்தியத்தில் ஏற்படும் போது எதிர்வரும் காலங்களில் விவசாயத்தினை செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக இன்று பாலைபரவுதல் செயற்பாடுகள் காரணமாக 18% ஆன விவசாயமானது தரமிழந்து செல்கின்றமையினை காணலாம்.

Effects of Desertification

பசி  மற்றும்  பட்டினி ஏற்படுதல்- பாலைபரவுதல் காரணமாக விவசாயம் மற்றும் குடிநீர் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் பஞ்சம், பசி, பட்டினி முதலானவை ஏற்படுகின்றது. இதனை குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அவதானிக்ககூடியதாக உள்ளது. சூடானில் உணவு பஞ்சத்தால் 2.8 மில்லியன் மக்களும், எத்தியோப்பியாவில் 8 மில்லியன் மக்களும், யுனிசெப் தரவுகளின்படி 1.4 மில்லியன் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் சோமாலியாவில் 1 மில்லியன் மக்களும் 300000 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உகண்டாவினை பொறுத்தவரை 550000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்னீர் பற்றாக்குறை- குறிப்பாக பாலைபரவுதல் காரணமாக நீர் நிலைகள் வெப்பத்தின்  நிமிர்த்தம் வற்றிப்போகின்ற நிலை உருவாகின்றது. இதன் காரணமாக மக்களுக்கு  போதுமான அளவு நன்னீர் கிடைக்காமல் போகின்றது. இந்த பிரச்சனை காரணமாக அதிகளவு மக்கள் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் பாதிக்கப்படுகின்றனர். நீர்பற்றாக்குறை காரணமாக ஈரானில் 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு , பாகிஸ்தானில் 3 மில்லியன் மக்களும், உப சகாரா பகுதியில் 319 மில்லியன் மக்களும், சீனாவில் வட ஷங்கி பகுதியில் 3 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Effects of Desertification

வறுமை நிலை ஏற்படுகின்றது- பாலைபரவுதல் செயற்பாடுகளினால் விவசாயப்பகுதிகள், கால்நடைகள் போன்றன அழிவுறுகின்றன. இதன்காரணமாக மக்கள் தொழில்களில் ஈடுபட முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதன்காரணமாக அங்கே வறுமை நிலை தோற்றம் பெறுகின்றது. குறிப்பாக பாலைபரவுதல் செயற்பாட்டின் காரணமாக உபசகாரா  பகுதி,வட ஆபிரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் 2020ம் ஆண்டு 60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டு 2.4 பில்லியன் வாழ்விட பகுதிகள் பாதிக்கப்படும் எனவும் இதனால் 700 மில்லியன் மக்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என IPCC- Inter Panel Challenge of Climate Change கூறுகின்றது.

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...