அதிகளவிலான மழைப்பொழிவு- திடீரென அதிகளவிலான மழை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் தோன்றுகின்றது. குறிப்பாக 2005ம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு 5 மீட்டர் அளவிலான மழைவீழ்ச்சியே காரணமாகும். 2015ம் ஆண்டு சென்னையில் 483 மில்லிமீட்டர் மழைப்பொழிவினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 2016ம் ஆண்டு இலங்கையில் 350 மில்லிமீட்டர் மழைப்பொழிவினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர 2018ம் ஆண்டு இலங்கையில் முல்லைத்தீவு , ஆகிய மாவட்டங்களில் 365 மில்லிமீட்டர் மழையினால் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மற்றும் கடந்த வருடம் அதாவது நிவர் புயல், புரேவி புயல் காரணமாக இலங்கையின் கரையோர பகுதிகள் குறிப்பாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுமட்டுமில்லாது இந்தியாவின் கரையோர பகுதிகளில் அதிகளவிலான வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டது.
நதிகளில் நீர் நிரம்பி வழிதல்- நதிகளில் அதிகளவிலான நீர் தேங்குகின்ற சந்தர்ப்பத்தில் கொள்ளளவு அதிகரிக்கும்போது அவை வெள்ளமாக மாறுகின்றது. குறிப்பாக கங்கை நதி, யமுனை நதி ஆகியவற்றின் அதிக கொள்ளளவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இதன் காரணமாக பங்களாதேஷில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
நீர்தேக்கங்களின் உடைவு- நீர்த்தேக்கங்கள் அதிகளவு மனித நடவடிக்கைகள் காரணமாகவும் மழைப்பொழிவின் தீவிரத்தன்மை காரணமாகவும் உடைவு ஏற்படுகின்றது. இது வெள்ளப்பெருக்கினை தோற்றுவிக்கின்றன. 2011ம் ஆண்டு மிசூரிமிசிசிப்பி நதிகளின் தேக்கம் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3.98$ செலவு ஏற்பட்டது. 1972ம் ஆண்டு வர்ஜீனியாவில் உள்ள கிரீக் பள்ளத்தாக்கு உடைவினால் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நகர்ப்புற வடிகால் அமைப்பு- மழைப்பொழிவு அதிகமாக நிகழும் சந்தர்ப்பத்தில் நகர்ப்புறங்களில் வடிகால் அமைப்புகளில் அளவுக்கதிகமான நீர் தேங்குகின்றது. இதனால் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புக்களின் இடையில் நீர் வழிந்தோட இடமில்லாமல் அவ்விடத்தில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக இதனை மும்பை, ஷாங்காய், நியூயோர்க் ஆகிய நகரங்களில் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
புயல்கள் மற்றும் சுனாமி- அதிகளவிலான சூறாவளியினாலும், சுனாமியினாலும் அதிக நீர் கரையோரத்தினை தாக்குகின்றது. இதனால் வெள்ளப்பெருக்கானது கரையோர பகுதிகளில் நிகழ்கின்றது. 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி காரணமாககரைஒயர கரையோர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுதவிர 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக கரையோர பகுதிகளில் அதிகளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்படலங்கள் உருகுதல்- பூகோள வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக முனைவு பகுதியில் உள்ள பனிப்படலங்கள் உருகுகின்றது. இதன்காரணமாக நதிகளின் கொள்ளளவு அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. குறிப்பாக இமாலயப்பகுதி பனிப்படலங்கள் உருகி கங்கை நதி, யமுனை நதி ஆகிய நதிக்கரையோரங்களில் கொள்ளளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.


No comments:
Post a Comment