Thursday, March 18, 2021

காட்டுத்தீயினை ஏற்படுத்தும் காரணிகள்

அதிகளவான வெப்பநிலை- இன்றைய உலகில் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலையானது அதிகரித்து  வருகின்றது. 19 நூற்றாண்டின் இறுதியில் பூகோள வெப்பநிலை 0.5 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரித்துள்ளது. 1950-1993களில் 0.75 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரித்தது. இன்றைய நிலையில் 1.4- 5.8 பாகை செல்ஸியஸ் இனால் அதிகரிக்கப்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த அதிகரித்த வெப்பநிலை காரணமாக காடுகள் தாமாகவே பற்றிக்கொள்கின்ற நிலை ஏற்படுகின்றது. இதனால் காட்டுத்தீ உருவாகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் 80% ஆன காட்டுத்தீ வெப்பநிலை அதிகரிப்பினால் தான் ஏற்படுகின்றது.

வரட்சி நிலை- அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக உலகில் வரட்சி நிலை உருவாகின்றது. இதன் காரணமாக அதிகளவிலான காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2014ம் ஆண்டு கலிபோர்னியாவில் வரட்சி காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக 2500 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. இதுமட்டுமில்லாது 2017ம் ஆண்டு மேற்கு அமெரிக்காவில் மெக்சிக்கோ பகுதியில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 3.3 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிவுற்றன.

காட்டுத்தீ

இடிமின்னல் தாக்கம்- மழை பெய்கின்ற காலங்களில் இடிமின்னல் தாக்கம் என்பது அனைத்து பிராந்தியங்களிலும் நிகழும் ஒரு சாதாரண நிகழ்வாகும். இதன்போது ஏற்படும் தீப்பொறிகள் காடுகளில் விழும்போது காடுகள் எரிவடைகின்றன. உலகில் 12% ஆன காட்டுத்தீ அனர்த்தம் இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்படுகின்றது. 2017ம் ஆண்டு கலிபோர்னியாவின் வென்டரா நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 4500 ஏக்கர் காடுகள் அழிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

மரங்களின் உராய்வு தன்மை- அதிக வரட்சி காரணமாக காற்றின் தீவிர தன்மை கூடுதலாக காணப்படும் வேளை மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதனால் நெருப்பு ஏற்படுகின்றது. குறிப்பாக இந்த சூழ்நிலையினால் மூங்கில் மரங்கள் உடனடியாக உராய்வினால் தீப்பற்ற தொடங்குகின்றன. இதனால் காடுகள் அழிவுறுகின்ற நிலை ஏற்படுகின்றது. 2008ம் ஆண்டு பிரேசிலில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு அடிப்படை காரணம் மூங்கில் மரங்களின் உராய்வு தன்மை  ஆகும்.

காட்டுத்தீ

நிலநடுக்கம்- உலகில் ஏற்படும் நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் காடுகளில் ஏதேனும் ஒரு காரணமாக தீ பற்றுகின்ற சந்தர்ப்பத்தில் காட்டுத்தீ ஏற்படும். குறிப்பாக 2017ம் ஆண்டு சன்றோ ரோசா என்ற இடத்தில் 4 ரிக்டர் அளவுத்திட்டத்தில் இடம்பெற்ற புவிநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள காடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் கலிபோர்னியாவில் 3061 வீடுகள் முற்றாக அழிவுற்றன.

யுத்த நடவடிக்கைகள்- இன்றைய உலகில் அதிகளவான கலவரங்கள் நாடுகள் மத்தியில் ஏற்படுகின்றது. இதனால் ஆயுததாரிகள் பயன்படுத்தும் குண்டுகள், செல்கள் ஆகியன காடுகளில் விழுகின்ற சந்தர்ப்பத்தில் காட்டுத்தீ ஏற்படுகின்றது. குறிப்பாக 2ம் உலக மகா யுத்தத்தின்போது தென்மேற்கு பெர்லினில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன்போது 500 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. 

எரிமலை செயற்பாடுகள்- ஒரு பிரதேசத்தில் எரிமலை கக்குகை நிகழும் போது வெளித்தள்ளப்படும் லாவா குழம்பானது நகர்ந்து தாவரப்போர்வைகளினை தாக்குமிடத்து அங்கு வெப்பத்தின் காரணமாக காடுகள் அழிவுறுகின்றன. இவ் லாவா குழம்பானது 2000 பாகை பரனைட்  வெப்பநிலையினை கொண்டதாகும். 2018ம் ஆண்டு கவாய் எரிமலை கக்குகையின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக 104 ஏக்கர் காடுகள் அழிவுற்றன. அத்துடன் 26 வீடுகள் முற்றாக அழிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...