உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா ஆகும். இது அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது 1984 ஆம் ஆண்டு வெடித்ததற்கு பின்பு அண்மைய ஆண்டில் கக்குகையினை மேற்கொண்டுள்ளது. மௌனா லோவா என்றால் ஹவாய் மொழியில் நீளமான மலை என்று பொருளாகும். உலகின் மிகப்பெரிய உயிரோட்டத்துடன் இருக்கும் எரிமலை இதுவாகும்.
இது அமெரிக்காவில் மேற்கே பசுபிக் பெருங்கடலை அண்மித்து ஹவாய் தீவில் அமைந்துள்ளது.ஹவாய் தீவினை உருவாக்கும் 5 எரிமலை தொடர்களில் இது 2035 சதுரகிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 13680 அடி உயரத்தில் இதன் உச்சி அமைந்துள்ளது.
1843ம் ஆண்டு இந்த எரிமலை முதன்முதலாக வெடித்துள்ளது. 1843 முதல் ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 33 முறை வெடித்துள்ளது. இந்த எரிமலையயின் பாறைகள் 1 மில்லயன் வருடங்கள் பழமை வாய்ந்தவை. இது இறுதியாக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி தனது கக்குகையினை மேற்கொண்டது. இந்த எரிமலை ஷீல்ட் எரிமலை வகையினை சார்ந்தது ஆகும்.
.jpg)
No comments:
Post a Comment