Tuesday, November 14, 2023

நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் அந்த கிரங்கங்களில் இருந்து வெளிவரும் வெப்பம்  காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்புக்கு ஆய்வாளர்கள் கெப்லர் - 385 என்று பெயரிட்டுள்ளனர். 

கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கிரங்கங்களும் அளவில் பூமியை விட பெரிதாகவும் நெப்ரியூனை விட சிறியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப்லர் -385 இன் மையத்தில் சூரியனை போன்ற ஒரு நட்ச்சத்திரம் இருக்கிறது. அந்த நட்ச்சத்திரம் சூரியனை விட சுமார் 10% பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சூரிய குடும்பங்களில் அதிகளவில் கிரங்கங்கள் இருக்காது என்றும் ஆறுக்கு மேற்பட்ட கிரங்கங்களை கொண்ட ஒரு சில சூரிய குடும்பங்களில் இந்த கெப்லர் -385 ஒன்றாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது நாசாவின் புதிய சாதனையாக காணப்படுகின்றது.

Sunday, November 12, 2023

வொல்கா நதி பற்றிய தகவல்கள்

 ஐரோப்பா கண்டத்தின் மிக நீளமான நதியாக இருப்பது வொல்கா நதி ஆகும். இது ரஸ்சியா நாட்டில் அமைந்துள்ளது. இந்த வொல்கா நதி மத்திய ரஸ்சியா , தெற்கு ரஸ்சியா போன்ற இடங்களின் ஊடாக சென்று காஸ்பியன் கடலில் சங்கமிக்கின்றது. இதன் நீளம் 3531 கிலோமீட்டர்கள் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 228 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. இந்த நதியானது வால்டை மலையில் இருந்து உற்பத்தியாகி காஸ்பியன் கடலில் சங்கமிக்கின்றது.

இதன்  வடிநில பரப்பளவு 1.36 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள் ஆகும். வொல்கா நதி ஆனது ஐரோப்பாவின் நாகரிகத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனை அடிப்படையாக கொண்டு அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். உலகின் 18வது நீளம் கூடிய நதியாக வொல்கா நதி காணப்படுகின்றது. இந்த நதியானது செக்கனுக்கு 8060 கியூபிக் மீட்டர் நீரினை வெளியேற்றுகின்றது. வொல்கா நதி ஆனது அதிகளவிலான உயிர்ப்பல்வகைமை தன்மையினை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நதியில் 430 வகையான தாவரங்கள், 127 வகையான மீனினங்கள், 260 வகையான பறவைகள், 850 வகையான நீரியல் உயிரினங்கள் போன்றன வாழ்கின்றன. 

Thursday, November 9, 2023

உலகின் மிகப்பெரிய எரிமலை

உலகின் மிகப்பெரிய எரிமலை மௌனா லோவா  ஆகும். இது அமெரிக்காவில் அமைந்துள்ளது. இது 1984 ஆம் ஆண்டு வெடித்ததற்கு பின்பு அண்மைய ஆண்டில் கக்குகையினை மேற்கொண்டுள்ளது. மௌனா லோவா என்றால் ஹவாய் மொழியில் நீளமான மலை என்று பொருளாகும். உலகின் மிகப்பெரிய உயிரோட்டத்துடன் இருக்கும் எரிமலை இதுவாகும்.

இது அமெரிக்காவில் மேற்கே பசுபிக் பெருங்கடலை அண்மித்து ஹவாய் தீவில் அமைந்துள்ளது.ஹவாய் தீவினை உருவாக்கும் 5 எரிமலை தொடர்களில் இது 2035 சதுரகிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 13680 அடி உயரத்தில் இதன் உச்சி அமைந்துள்ளது.


1843ம் ஆண்டு இந்த எரிமலை முதன்முதலாக வெடித்துள்ளது. 1843 முதல் ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒருமுறை 33 முறை வெடித்துள்ளது. இந்த எரிமலையயின் பாறைகள் 1 மில்லயன் வருடங்கள் பழமை வாய்ந்தவை. இது இறுதியாக 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி தனது கக்குகையினை மேற்கொண்டது. இந்த எரிமலை ஷீல்ட்  எரிமலை வகையினை சார்ந்தது ஆகும். 

Tuesday, November 7, 2023

இஸ்ரேல் பற்றிய தகவல்கள்

 இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடாகும். இதற்கு வடக்கே லெபனானும் வட கிழக்கே சிரியாவுக்கு கிழக்கே ஜோர்டானும் தெற்கே செங்கடலும் மேற்கே மதியதரைக்கடலும் காணப்படுகின்றது. இஸ்ரேலின் தலைநகரம் ஜெருசலேம் ஆகும். இதன் அமைவிடத்தினை அவதானிக்குமிடத்து வட அகலாங்கு 3 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 13 பாகைக்கும் இடையில் அமைந்துள்ளது. 

இஸ்ரேலின் பொது மொழி அரபிக் ஆகும். இஸ்ரேலின் பரப்பளவு 22072 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள மக்கள் தொகை  9790400 ஆகும். உலக சனத்தொகையில் இஸ்ரேல் 93வது இடத்தினை பிடித்துள்ளது. இஸ்ரேலின் நீளம் 400 கிலோமீட்டர்கள் . இஸ்ரேலின் அகலம் 100 கிலோமீட்டர்கள் ஆகும். இங்கு ஜோர்டான் பெரிய பள்ளத்தாக்கு காணப்படுகின்றது.

இஸ்ரேலின் காலநிலை பற்றி அவதானிக்குமிடத்து இஸ்ரேல் மத்தியதரை காலநிலைக்கு உட்பட்ட நாடாகும். இந்த இஸ்ரேல் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பிரதான நதி ஜோர்டான் நதி ஆகும். இந்த நதியின் நீளம் 251 கிலோமீட்டர்கள் ஆகும்.

Saturday, November 4, 2023

பூமி கோள வடிவானது என்பதற்கு சான்றுகள்

 பூமியின் ஓர் இடத்திலிருந்து கிழக்கு புறமாக புறப்பட்டால் அதே இடத்தை மேற்கு பக்கமாக வந்து சேர முடியும். பூமி தட்டை வடிவானது என்றால் அவ்வாறு வந்தடைய முடியாது. 1519ம் ஆண்டு மகலன் என்ற கடலோடி முதன் முதலில் உலகத்தை கப்பல் மூலம் சுற்றி வந்து உலகம் உருண்டையானது என்று நிரூபித்தார்.

கடற்கரையிருந்து பார்க்கும்போது வெகு தொலைவில் வரும் கப்பலின் பாய்மர உச்சியே முதலில் தெரியும். கப்பல் கரையை நெருங்க நெருங்க அதன் ஏனைய பகுதிகள் தெரிகின்றன.  இதற்கு காரணம் பூமி உருண்டை வடிவமாக இருப்பது தான்.

அடிவானம் வட்டமாக தெரிவதற்கும் சந்திர கிரகண காலத்தில் சந்திரனில் விழும் பூமியின் நிழல் வட்டமாக இருப்பதற்கும் பூமி உருண்டையாக இருப்பதே காரணமாகும்.

சூரிய குடும்பத்தில் காணப்படும் கோள்கள் யாவும் உருண்டையானவை. பூமியும் அவற்றில் ஒரு கோளாக இருக்கிறது. ஆகையால் பூமியும் உருண்டை வடிவானதாகும்.

கொழும்பிலிருந்து கிழக்கு புறமாக விமானத்தில் சென்று அமெரிக்காவினை அடையலாம். அதேபோல மேற்கு புறமாக சென்றும் அமெரிக்காவை அடையலாம்.  இதன்முலம் பூமி கோள வடிவானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூமி தட்டையாக இருந்தால் சூரிய உதயத்தை பூமியிலுள்ள எல்லா மக்களும் ஒரே நேரத்தில் காணமுடியும். ஆனால் அவ்வாறு காண்பது சாத்தியமில்லை. இதுவும் பூமி கோள  வடிவானது என்று நிரூபிக்கின்றது.

 

Friday, November 3, 2023

உலகின் கடல்களும் சமுத்திரங்களும்

 இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடாகும். இதற்கு வடக்கே லெபனானும் வட கிழக்கே சிரியாவுக்கு கிழக்கே ஜோர்டானும் தெற்கே செங்கடலும் மேற்கே மதியதரைக்கடலும் காணப்படுகின்றது. இவ்வாறான சமுத்திரங்கள் 5 காணப்படுகின்றன. இந்த சமுத்திரங்களில் மிக ஆழமான சமுத்திர அகழிகள் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமான சமுத்திர அகழிகளாக மரியானா அகழி, மின்டோனா அகழி காணப்படுகின்றன. இந்த அகழிகளில் பசுபிக் சமுத்திரத்தில் அதிகமான அகழிகள் காணப்படுகின்றன. இவ்வாறான சமுத்திரங்களாக பசுபிக்  சமுத்திரம்,அத்திலாந்திக் சமுத்திரம், இந்து சமுத்திரம், ஆட்டிக் சமுத்திரம், அந்தாட்டிக் சமுத்திரம் போன்றவையாகும்.

முழுவதும் அல்லது பகுதியாக நிலப்பகுதியினால் சூழப்பட்ட சமுத்திரங்களுடன் இணைந்து காணப்படும் உவர்நீரை கொண்ட நீர்பகுதிகள் கடல்நீர் என அழைக்கப்படும். முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட கடல்களாக மத்தியதரைக்கடல் , செங்கடல், கருங்கடல் , மஞ்சள் கடல், யப்பான் கடல், பால்டிக் கடல் போன்றன காணப்படுகின்றன. சமுத்திரங்களுடன் இணைப்பினை கொண்ட கடல்களாக அரேபியன் கடல், சீனக்கடல் போன்றன காணப்படுகின்றது. 


Thursday, November 2, 2023

புவியில் இரவு பகல் நிகழ்வு

 புவிச்சுழற்சி காரணமாக இரவு பகல் ஏற்படுகின்றது . பிரதேசங்களுக்கு இடையில் நேர வேறுபாடுகள் ஏற்படுகின்றது புவிச்சுழற்சியின் போது சூரிய ஒளியை பெறும் புவியின் ஒரு பகுதி பகல் நேரத்தை கொண்டிருக்கும். சூரிய ஒளியை பெறாத மறுபக்கம் இரவு நேரமாக இருக்கும். நெடுங்கோடுகளின் அமைவுக்கு ஏற்ப உலகின் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய நேரம் ஒன்றுக்கொன்று வேறுபடும். உலகில் நேரம் எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை அவதானிப்போம்.

சூரியன் உச்சம் தரும் நெடுங்கோட்டில்  பகல் 12.00 ஆகும்போது அதற்கு எதிர்மாறான திசையிலுள்ள நெடுங்கோட்டில் நள்ளிரவு 12.00 மணியாகும். புவி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்வதனால் உலகின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் முதலில் சூரியன் உதிக்கிறது. மேற்கு நெடுங்கோடுகளில் அமைந்துள்ள நாடுகளுக்கு சூரியன் பின்னரே உதயமாகும்.

புவி தனது அச்சினை சுற்றி ஒருமுறை சுழல்வதற்கு 24 மணித்தியாலம் எடுப்பதுடன் 360 பாகை நகர்வையும் கொண்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு மணித்தியாலத்தில் இதன் நகர்வு 15 பாகை நெடுங்கோடு ஆகும். 1 பாகை இனை கடந்து செல்வதற்கு 4 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. எனவே 2 அகல கோடுகளுக்கு இடையில் நேரமானது 4 நிமிடங்களினால் வேறுபடும். இதன்படி 15 பாகை நெடுங்கோட்டுக்கான நேர வேறுபாடுகள் 1 மணித்தியாலங்கள் ஆகும். 

Wednesday, November 1, 2023

அகலக்கோடுகள் ,நெடுங்கோடுகள்

புவியில் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனை கோடுகள் அகலக்கோடுகள் எனப்படும். 0 பாகை அகலக்கோடு மத்திய கோடு ஆகும். மத்திய கோட்டுக்கு வடக்காக அமைந்துள்ள கோடுகள் வட அகலக்கோடுகள் ஆகும். மத்திய கோட்டுக்கு தெற்காக அமைந்துள்ள கோடுகள் தென் அகலக்கோடுகள் ஆகும். 0 தொடக்கம் 90 பாகை வரை உள்ள அகல கோடுகள் வடக்கு மற்றும் தெற்கு முனைவுகளை நோக்கி சிறுத்து செல்லும். வட முனைவும் தென் முனைவும் புள்ளியாக இருக்கும். புவியின் பிரதான அகல கோடுகளாக கடக கோடு, மகர கோடு போன்றன காணப்படுகின்றன.

புவிக் கோளத்தில் வட முனைவிலிருந்து தென் முனைவு வரை விரிவடந்து காணப்படும் கற்பனைக் கோடுகள் நெடுங்கோடுகள் என்று  சொல்லப்படுகின்றது. 0 பாகை நெடுங்கோடு கிரீன்விச் கோடு என்பார்கள்.கிரீன்விச் நெடுங்கோட்டுக்கு கிழக்காக 180 பாகை வரை  உள்ள கோடுகள் கிழக்கு நெடுங்கோடுகள் என்று சொல்லப்படுகின்றது.  கிரீன்விச் கோட்டுக்கு மேற்காக 180 பாகை வரை உள்ள கோடுகள் மேற்கு நெடுங்கோடுகள் என்று சொல்லப்படுகின்றது. 0 பாகை நெடுங்கோடு இங்கிலாந்தின் கிரீன்விச் நகரத்தை ஊடறுத்து செல்வதினால் கிரீன்விச் கோடு என்று சொல்லப்படுகின்றது


நாசா படைத்த புதிய சாதனை

 கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா 7 புதிய கிரங்கங்களை கண்டுபிடித்த்துள்ளது. சூரியகுடும்பத்தில் உள்ள எந்த கிரகத்தை எடுத்தாலும் ...