ஆபத்தான ஏழு நிமிட பாய்ச்சலுக்கு பின் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய ஆய்வு இயந்திரமான இன்சைட் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த இன்சைட் விண்கலம் செவ்வாயின் நிலத்துக்கு கீழ் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. பூமிக்கு அப்பால் மனிதன் இவ்வாறான ஆய்வு ஒன்றை மேற்கொள்வது இது முதல் முறையாகும். இன்சைட் ஆய்வு இயந்திரம் இலங்கை நேரப்படி 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாயை தொட்டது என உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக அது வெற்றிகரமாக தரையிறங்கிய சமிக்கை 2 நிமிடங்கள் கழித்தே பூமியை வந்தடைந்தது.
இன்சைட் விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தின் நிலைக்கோட்டுக்கு அருகில் எலிசியம் ப்லாசினியா என அழைக்கப்படும் பரந்த தட்டையான பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்த இடத்தை செவ்வாயின் மிகப்பெரிய தரிப்பிடம் என்று நாசா வர்ணித்துள்ளது.
இன்சைட் தரையிறங்கிய விரைவில் அந்த நிலப்பரப்பின் முதல் படத்தை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வு இயந்திரத்தை சூழ அழுக்கான மந்தமான நிலையில் இருப்பதை காண முடிகின்றது. விண்கலத்தின் கீழ் பக்கம் உள்ள கமரா ஒன்றின் ஊடாக இந்த படம் பிடிக்கப்பட்டுள்ளது. படத்தில் தூசி மேலெழுந்திருப்பதை காண முடிந்த போதும் சிறுசிறு பாறைகள் இருப்பது தெரிகிறது.
செவ்வாய் வளிமண்டலத்தில் மணிக்கு 19800 கிலோமீட்டர் வேகத்தில் நுழைந்த விண்கலம் தந்து வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் கேடயம் பரசூட் மற்றும் ரொக்கெட் உதவியுடன் மெதுவாக தரையிறங்கியது. அதிகப்படியான புழுதியால் விண்கலத்தில் உள்ள லென்ஸ் மறைக்கப்பட்டதால் தரையிறங்குவதில் பெரும் சவால் ஏற்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தரையிறங்கிய வரையில் அதன் சூரிய சக்தி கருவியை நிறுவுவது முதல் சவாலாக இருந்தது. செவ்வாயின் பூச்சிய வெப்பநிலைக்கு மத்தியில் இன்சைட் தனது இயக்கத்தை ஆரம்பிக்க சக்தியை பெறவேண்டி உள்ளது. இன்சைட் பின்தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு சிறிய செயற்கை கோள்கள் சென்றுள்ளன. இவை அங்கு இன்சைட் எடுக்கும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்ப உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.



























